ஆதாரங்களை அடுக்கிய அமலாக்கத்துறை... திக்கு முக்காடிய செந்தில் பாலாஜி தரப்பு...

Update: 2023-06-28 03:46 GMT

தமிழ்நாட்டின் முன்னாள் மின்துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சியில் போக்குவரத்துக்கு துறை அமைச்சராக இருந்தபோது, பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த புகாரில் ஜூன் 13ஆம் தேதியன்று அமலாக்கத் துறை கைதுசெய்தது. கடந்த ஆட்சியின் போது இந்த மோசடியின் பெயரில் தற்போது அவர் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்ட பிறகு, தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறிய செந்தில் பாலாஜி முதலில் அரசு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்குப் பிறகு நீதிமன்ற உத்தரவைப் பெற்று காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது இதயத்தில் இருந்த அடைப்புகளுக்கு இன்று காலை நான்கு மணியளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் அவரது உடல்நலம் தற்போது சீராக இருப்பதாகவும் பல்வேறு நிபுணர்களைக் கொண்ட மருத்துவக் குழு அவரைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் பிறகு தற்போது அமலாக்கத்துறை மீண்டும் அவரை கைது செய்தது. அதன் பிறகு, செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இதனுடைய வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள் நிஷாபானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது சட்டவிரோதமானது என்றும், இயந்திரதனமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.


நீண்ட விவாதத்திற்கு பின், அமலாக்கத் துறை வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்த வழக்கை வாதிட்டார். இரண்டு தரப்புகளில் இருந்தும் காரசாரமான கேள்விகள் வெளிவந்தது. அதிலும் குறிப்பாக அமைச்சர் ஊழல் செய்வதற்கான குற்றச்சாட்டுகள் மற்றும் அதற்குரிய ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.


தொடர்ச்சியான முறையில் வாதிட்ட அமலாக்கத்துறை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இது பற்றி வாதிடும் பொழுது, "செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் பெற்றார் என்பதற்கான ஆதாரம் உள்ளது, அதன் அடிப்படையில் தான் அவர் கைது செய்யப்பட்டார். உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், ரூ.50,000 வரை அபராதம் விதிக்கவும்.


மேலும் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக அமலாக்க துறையினர் கைது செய்யப் படவில்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்து இருந்தார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளதால், செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை என்று கூறினார். நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்படவில்லை ஆட்கொணர்வு வழக்கு தொடர முடியாது என அமலாக்கத்துறை தரப்பு சார்பில் வாதிடப்பட்டது.

அதாவது சட்டப்படி நீதிமன்றமே ஒரு நபரை விசாரணை செய்யலாம் என்று அனுமதி வழங்கிய பிறகு அவரை நீதிமன்ற காவலில் எடுத்து அமலாக்கத் துறையினரால் விசாரிக்க முடியும். இப்படி எடுக்கும் நபர் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டு தான் இருப்பார். மேலும் அவர் மீது போடப்பட்ட வழக்கை எதிர்த்து ஆட்கொணர்வு வழக்கு தொடர முடியாது என்று தெள்ளத் தெளிவாக தங்களுடைய பதிலை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இப்படி அமலாக்க துறையினர் தங்களிடம் ஆதாரம் இருப்பதாக கூறி இருப்பது செந்தில் பாலாஜி தரப்பினரை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


 இதுவரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைதுக்கு பாஜக தன் காரணம் என்று குற்றம் சாட்டி வந்த அறிவாலய வட்டாரங்கள்., தற்பொழுது செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரத்துடன் தான் அமலாக்க துறை களமிறங்கி இருக்கிறார்கள் என்பதை தெரிந்துவுடன் தற்போது கலக்கத்தில் தான் இருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

Tags:    

Similar News