மிகப்பெரிய திட்டத்துடன் தட்டித் தூக்க போகும் மோடி...

Update: 2023-07-11 06:24 GMT

2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 10 மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்காக பல்வேறு கட்சிகளும் தயாராகி வருகிறது. குறிப்பாக 2024 மக்களவை தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. பாஜக இப்படி ஒரு பக்கம் தயாராக கொண்டிருக்கும் பொழுது மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய திட்டத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்க்க வேண்டும் என்று நோக்கில் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த முறையாவது எப்படியாவது தங்கள் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று நோக்கில் பொதுக்குழு கூட்டங்களை ஆங்காங்கே நடத்துகிறார்கள்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் பாஜக கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் களம் இறங்கியுள்ளது. 2014 மற்றும் 2019ஆம் தேர்தல்களில் பயன்படுத்திய புதிய யுக்தி உடன் தற்போது 2024-ம் ஆண்டும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மீண்டும் பிரதமராக அரியணையில் மூன்றாவது முறையாக உட்கார வைக்க வேண்டும் என்ற ஒரு முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர்கள் 8 பேர் உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் 10 பேர் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக இவர்கள் மேல்மட்டத்தில் இருந்து தேர்தல் தொடர்பான அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பார்கள் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.


பாஜகவின் தேசிய செயற்குழு தான் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்திவாய்ந்த அமைப்பாக பார்க்கப்படுகிறது. பாஜகவின் நியமனங்களின்படி, தெலங்கானா மாநில முன்னாள் தலைவர் பாண்டி சஞ்சய் குமார், ஆந்திர மாநில முன்னாள் தலைவர் சோமு வீர்ராஜூ, ஜார்கண்ட் மாநில முன்னாள் தலைவர் தீபக் பிரகாஷ், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சதீஷ், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் ஜெய்ஸ்வால், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்வனி சர்மா, ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் காஷ்யப் ஆகிய 8 பேர் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


மேலும், சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவர் தரம்லால் கவுசிக் மற்றும் ராஜஸ்தான் தலைவர் கிரோடி லால் மீனா ஆகியோரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட அனுபவமிக்க தலைவர்களைக் கொண்ட பாஜக தேசிய செயற்குழுவானது கட்சியின் கொள்கை சார்ந்த மற்றும் உயர்மட்ட முடிவை எடுக்கும் அமைப்பாகும். பாஜக தேசிய செயற்குழுவில் உறுப்பினர்களை தவிர, 6 தலைவர்கள், 5 பொதுச் செயலாளர்கள், 1 பொதுச் செயலாளர் ஆகியோரும் உள்ளனர். இந்த நிர்வாகிகள் தேர்தல் வேலைகளை கவனிப்பார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது.


ப்படி பல்வேறு கட்ட செயற்குழு தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோரை நியமித்து தேர்தல் தொடர்பான பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது பாஜக.. இது இப்படி இருக்கும் பொழுது மற்றொரு பக்கம் தென்னிந்தியாவில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்றும் தென்னிந்திய மாநில நிர்வாகிகள் கோரிக்கை ஒன்றை வைத்திருப்பதாகவும், இது தொடர்பாக பிரதமர் மோடி அவர்கள் விரைவில் முடிவு எடுப்பார் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

தென்னிந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதே, இங்குள்ள மக்கள் அவரை எப்படி வரவேற்த்தார்கள் என்பது நாம் அறிந்ததே. கண்டிப்பாக நீங்கள் தென்னிந்தியாவில் போட்டியிட வேண்டும் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளும் எழப்பட்டு இருக்கிறது, விரைவில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

Tags:    

Similar News