ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக வரிகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒரே நாடு ஒரே வரி திட்டத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி (GST) எனும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இந்த ஜிஎஸ்டி வரிகள் விதிப்பு, வரிகள் குறைப்பு பற்றி ஆலோசிக்க மாதந்தோறும் மத்திய நிதி அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் நிதி அமைச்சர் அல்லது அவரது பிரதிநிதிகள் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். இதில் வரியில் மாற்றம் செய்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு அதன் மூலம் முடிவுகள் எடுக்கப்படும். இந்த முடிவுகள் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு அதன் பிறகு, மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்படும்.
அந்த வகையில் நேற்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் நடைபெற்றது. இந்த ஐம்பதாவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அனைத்து மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஜிஎஸ்டி தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைத்தனர். முன்னதாக, ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம் மற்றும் கேசினோ நிறுவனங்களின் வருவாய்க்கு 28 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது.
அதன் பிறகு வந்த அறிவிப்பு தான் ஒட்டுமொத்தமாக பல தரப்புகளிலிருந்து பாராட்டுகளைப் பெற்று இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு தான் என்ன? என்று பார்க்கிறீர்களா, அது தான் உயிர்க்காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு என்ற அறிவிப்பு.
இது தொடர்பாக 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “புற்றுநோய் மற்றும் அரிய வகை நோய்க்கான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க பயன்படும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கவும் ஒப்புதல் தரப்பட்டது.