பாரீஸில் ஒலித்த இந்திய தேசிய கீதம்... கெத்தாக நின்ற பிரதமர் மோடி..

Update: 2023-07-14 04:32 GMT

பிரான்ஸ் நாட்டின் தேசிய தின விழாவில் பங்கேற்கவும், இரண்டு நாள் அரசு பயணமாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனி விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு இன்று காலை புறப்பட்டு சென்றார். ஆறாவது முறையாக பிரான்சிற்கு செல்லும் பிரதமர், சுமார் 90,000 கோடி மதிப்பிலான பல முக்கிய ஒப்பந்தங்கள் இருநாடுகளுக்கு இடையில் ஏற்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் ரஃபேல் போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கான ஒரு முக்கிய பயணமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எனவே இத்தகைய நிகழ்ச்சியில் பங்கு இருப்பதற்காக பிரதமர் மோடி அவர்கள் இன்று காலை இந்தியாவிலிருந்து புறப்பட்டு தற்பொழுது பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரின் ஒர்லி விமான நிலையத்தில் தரையிறங்கினார். அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு இருக்கிறது, பாரீஸ் சென்றடைந்த பிரதமர் மோடியை பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார்.

குறிப்பாக சிறப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, இந்திய தேசிய கீதம் ஒலிக்க கெத்தாக நின்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜூலை 14 ஆம் தேதி பாஸ்டில் தின அணிவகுப்பில் அவர் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக பாரீஸில் வசிக்கும் இந்தியர்கள் மிகவும் உற்சாகத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். "பிரதமர் மோடியை வரவேற்க தாங்கள் அனைவரும் உற்சாகமாக இருப்பதாகவும், அவருக்கு சிறப்பு தலைப்பாகை வழங்குவதாகவும்" தெரிவித்தனர்.


இந்திய குஜராத்தி கலாச்சார சங்கத்தின் தலைவர் ஜெயேஷ் பாவ்சே கூறுகையில், "பிரதமர் மோடியின் வருகை குறித்து அறிந்தவுடன் அவரை வரவேற்க தயாராகி விட்டோம். இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் கொடிகள் அடங்கிய சிறப்பு தலைப்பாகையை பிரதமர் மோடிக்கு நாங்கள் அளிக்க இருப்பதாகவும்" என்று அவர் கூறினார்.

குஜராத்தி கலாச்சார சங்கத்தின் துணைத் தலைவர் பாகுல் படேல் கூறுகையில், "நான் பிரான்சில் 35-36 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இதற்கு முன்பு வரை இந்திய பிரதமர்களுக்கு இந்த வரவேற்பு கிடைத்தது கிடையாது. குறிப்பாக நம்முடைய நாட்டில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நம் நாடு வித்தியாசமான அடையாளத்தைப் பெற்றுள்ளது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இப்போது எல்லோரும் சொல்கிறார்கள், இந்தியர்கள் மிகவும் நல்ல மனிதர்கள்" என்று அவர் உற்சாகத்துடன் பேட்டியளித்து இருக்கிறார்.


ஜூலை 14 வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள பாரத பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டார். தனி விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றடைந்த மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் பிரதமர் மோடியை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


அந்த ஒரு தருணம் நாளை நடைபெற இருக்கிறது. இந்த பயணத்தின்போது, கடற்படைக்கு தேவையான 26 ரபேல்-எம் போர் விமானங்களை கொள்முதல் செய்வது, மும்பை கப்பல் கட்டும் தளத்தில் மேலும் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. 

Tags:    

Similar News