பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2 நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்து விட்டு, தற்போது அரபு நாடான அபுதாபிக்கு சென்று இருக்கிறார். அபுதாபி வந்த மோடியை விமான நிலையத்திற்கு வந்து அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயாத் அல் நஹ்யான், கட்டியணைத்து வரவேற்றார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வரலாறு காணாத வகையில் அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. பிறகு இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஐக்கிய அரபு எமீரேட்ஸ் வந்த பிரதமர் மோடியை அதிபரை சந்தித்து பேசி இருக்கிறார்கள், அப்போது பல முக்கியமான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
2023 ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டின் தலைவர் சுல்தான் அல் ஜாபரையும் மோடி சந்தித்து பேசினார். அப்போது, ஐக்கிய அரபு எமீரேட்ஸ்-யின் தலைமைக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார். மேலும், பருவநிலை மாற்றம் தொடர்பாக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
குறிப்பாக பருவநிலை மாற்றம் தொடர்பாக இந்திய அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு திட்டங்களை இந்தியாவை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதற்கு இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் சிறந்த அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடியால் திட்டமிடப்பட்ட, "மிஷன் லைஃப் இந்தியா" தலைமையிலான உலகளாவிய ஒரு இயக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது இது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் தனிப்பட்ட மற்றும் கூட்டு நடவடிக்கையைத் தூண்டுதல் ஆகும்.
'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை' என்பது மிஷன் லைஃப்பின் மந்திரம் என்று ஏற்கனவே பிரதமர் மோடி கூறி உள்ளார். இந்த ஒரு இயக்கம் பூமியின் வாழ்கின்ற அனைத்து மக்களும் தங்களுடைய பூமியை பாதுகாப்பதற்காக எடுக்கும் ஒரு முயற்சி ஆகும். மிஷன் லைஃப் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை ஜனநாயகப் பூர்வமானதாக ஆக்குகிறது. இது பற்றியும் பிரதமர் மோடி அவர்களால் அரபு நாட்டில் எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியா மற்றும் அரபு நாட்டின் இடையிலான ஒப்பந்தங்களுக்கு பிறகு மோடி கூறுகையில், "கடந்த ஆண்டு, வரலாற்று சிறப்பு மிக்க பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டோம். 3 மாதங்களில் தயாரான இந்த ஒப்பந்தம், உங்களின் ஆதரவு ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியம் அற்றதாகி இருக்காது.