மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அசத்திய சந்திராயன்... விண்வெளி துறையில் வரலாற்றை எழுதப்போகும் இந்தியா...

Update: 2023-07-17 03:09 GMT

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் பதவி ஏற்றதில் இருந்து விண்வெளி துறையில் பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது சந்திராயன் 3 விண்கலத்தை இஸ்ரேல் வெற்றி கரமாக விண்ணில் செலுத்தி இருக்கிறது. இதுகுறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவராக இருந்த சிவன் நியூஸ் 18 சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "சந்திரயான் 1 க்கும் சந்திரயான் 2 க்கும் இடையே நீண்ட இடைவெளிக்கான காரணம் தொழில்நுட்பத்தை கட்டமைத்தோம். ஆனல் சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3க்கு இடையே கால இடைவெளி ஏன் குறைவு என்றால் இரண்டுமே ஒன்றுதான்.


ஆனால் தொழில்நுட்பத்தை மட்டுமே மேம்படுத்தியுள்ளனர். 3,00,000 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, வரும் வாரங்களில் அது நிலவை சென்றடையும். விண்கலத்தில் அறிவியல் உபகரணங்கள் நிலவின் மேல்தளத்தை ஆய்வு செய்து நமது அறிவைப் பெருக்கும். நமது விஞ்ஞானிகளின் முயற்சியால் விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு மிக வளமையான வரலாற்றுக்கு இது ஒரு சான்றாக விளங்கும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.


அதுமட்டுமில்லாமல் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சந்திரயான்-3-ன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறும் பொழுது, "இந்தியாவின் விண்வெளித் துறையைப் பொறுத்தவரை 2023 ஜூலை 14-ம் தேதி எப்போதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருக்கும். நமது 3-வது நிலவு விண்கலமான சந்திரயான்-3 தனது பயணத்தை தொடங்கி உள்ளது. இந்த மகத்தான பயணம் நமது நாட்டின் கனவுகளையும், நம்பிக்கைகளையும் தாங்கிச்செல்லும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.


அதுமட்டுமல்லாமல் தற்போது நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் -3 விண்கலம் அங்கு நிலவின் மேல்பரப்பில் இந்தியாவின் அடையாளத்தைப் பதிக்க இருக்கிறது. விண்கலத்தின் ரோவர் பிரக்யானின் பின்பக்க கால்களில் தேசிய சின்னமான அசோக சக்கரம் மற்றும் இஸ்ரோவின் சின்னம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

அவை நிலவில் இந்தியாவின் தடத்தை பதிக்கும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 15 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடங்களில், திட்டமிட்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த ஒரு தருணம் ஒட்டுமொத்த இந்தியாவின் பெருமைப்படும் தருணமாக அமைந்திருந்தது.


41 நாள் பயணத்துக்கு பிறகு, ஆகஸ்ட் மாத இறுதியில் நிலவை சந்திரயான்-3 கடைசியில் சென்றடைகிறது என்று விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை அனுப்பியது.

அது நிலவின் தரைப்பகுதியில் இருந்து 100 கி.மீ. உயரத்தில் நிலவை சுற்றி வந்து 312 நாட்கள் ஆய்வு செய்தது. அப்போது, நிலவின் மேற்பரப்பில் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது.


அதைத் தொடர்ந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ கடந்த 2008-ம் ஆண்டு முடிவு செய்தது. சந்திரயான்-2 விண்கலம் 2019 செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறால், திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.

இந்நிலையில், நிலவுக்கு இந்திய தனது மூன்றாவது விண்கலமான சந்திரயான் -3 விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்து இருக்கிறது. இந்த வெண்கலம் மூலமாக அங்கு நிலவின் மேல்பரப்பில் இந்தியாவின் அடையாளத்தைப் பதிக்கவுள்ளது. முற்றிலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சந்திராயன்- 3 விண்கலம் நிலவில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருப்பது, இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட இருக்கும் ஒரு அற்புத தருணமாகும். 

Tags:    

Similar News