இந்திய ராணுவத்திற்கு இத்தனை சக்திகளா.. சீனாவின் பாட்சா இனி பலிக்காது..

Update: 2023-07-21 03:19 GMT

இந்திய மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையில் எல்லை பிரச்சினை கடந்த நான்கு ஆண்டுகளாக நீடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்தியாவிற்கு சொந்தமான நிலத்தை சீனா வலுக்கட்டாயமாக அபகரிக்க விடாத தொடர் முயற்சிகளை செய்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் இந்திய ராணுவம் மேலும் வலுவடைந்து இருக்கிறது.

அதுமட்டுமல்ல பல்வேறு உலக நாடுகளின் ஆதரவும், நட்புறவும் சீனாவை காட்டிலும் இந்தியாவிற்கு அதிகமாக தான் இருக்கிறது இதற்கு முக்கிய காரணம் பிரதமர் அவர்களை தான் நாம் குறிப்பிட வேண்டும். இந்தியாவிற்கு சீனாவால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நிச்சயம் உலக நாடுகள் அந்த ஒரு விஷயத்தை கையில் எடுக்கும் என்று சீனா தற்போது உணர தொடங்கி இருக்கிறது.


இந்திய இராணுவ வீரர்களின் ஜெய் ஹிந்த் என்ற கோஷம் சீன இராணுவத்தினரை நடுக்க வைத்து இருக்கிறது. ஏனெனில் இந்திய ராணுவத்திடம் இருக்கும் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களைப் பற்றி சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது. G20 நாடுகளின் தலைமைக்கு இந்தியா பொறுப்பேற்று பிறகு சீனாவின் நடவடிக்கை தற்போது குறைந்து இருக்கிறது என்று கூட கூறலாம்.

ஏனெனில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கும் இந்த ஒரு சமயத்தில் இந்தியாவில் எதிர்க்கக் கூடாது என்ற ஒரு நோக்கில் சீனா தற்போது இருந்து வருகிறது. இருந்தால் அவ்வப்பொழுது இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் நுழைந்து அந்த பகுதியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு சீன ராணுவம் முயன்று வருகிறது.


அவற்றின் முறியடிக்கும் விதமாக லடாக்கின் பாங்காங் ஸோ ஏரி பகுதியிலும் கைலாஷ் மலை தொடரிலும் இந்திய இராணுவம் அதிரடியாக சில நடவடிக்கைகளை செய்து காட்டியது. அதாவது ஒரு சில முக்கிய மலைத்தொடர்களையும் ரோந்துப்பகுதிகளையும் இந்தியா கைப்பற்றியதன் மூலம் சீனாவுக்கு ஒரு நம்பமுடியாத அதிர்ச்சியை தந்தது.

இதற்கு முக்கிய காரணம் இந்திய இராணுவத்தின் பவர். இந்திய சீன எல்லை பெரும்பாலும் மலைமுகடுகளால் சூழப்பட்டது. உயரமான இந்திய மலை பகுதியில் நவீன யுக்திகளோடு அமைக்கப்பட்டிருக்கும் இந்திய இராணுவ நிலைகளையும் பங்கர்களையும் கைப்பற்ற (ஒவ்வொரு இந்திய வீரருக்கும்) ஐந்து முதல் எட்டு சீன வீரர்களை பலி கொடுக்க வேண்டியிருக்கும். இந்தியாவிற்கு சாதகமான எல்லைப்புற நிலப்பரப்பு அப்படிப்பட்டது.


உலகில் சீன இராணுவமே எண்ணிக்கையில் அதிக படைவீரர்களைக்(துருப்புக்கள்) கொண்ட ராணுவம் என்று மாயை தற்போது முறியடிக்கப்பட்டு இருக்கிறது. சீனாவின் இராணுவ துருப்புக்கள் எண்ணிக்கை சுமார் 23 லட்சம் எனவும் இந்தியாவின் துருப்புக்கள் எண்ணிக்கை 13 லட்சம் எனவும் ஒரு கணக்கு சொல்லுகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் இந்தியாவில் மேக் இன் இந்தியா என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.

இதன் மூலமாக தற்போது இந்தியாவிலேயே பல்வேறு ராணுவ தளவாடங்கள் உருவாக்கப்பட்டு ராணுவத்திற்கு தேவையான அனைத்தும் குறிப்பாக 80 சதவீதத்திற்கும் மேல் ஆயுதங்கள் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஸ்வாதி ரேடார் கட்டுப்பாட்டுடன் இணைந்து, திபெத்திய பீடபூமியினை தளமாக கொண்டு நிறுத்தப்பட்டுள்ள சீன ஏவுகணைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

எனவே என்னதான் சீன ராணுவம் இந்தியாவின் பகுதிகளை கைப்பற்ற நிலைத்தாலும் பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் இந்திய ராணுவத்தின் வலிமையை அவர்களால் எதிர்கொள்ள முடியாது.

Tags:    

Similar News