தமிழக அரசியலை புரட்டி போட இருக்கும் பா.ஜ.க.. அமோக ஆதரவுடன் 'என் மண் என் மக்கள்' யாத்திரை..
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களுக்கும் நடை பயணம் மேற்கொள்ள உள்ளார். ‘என் மண், என் மக்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நடைபயணத்தை ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து தொடங்க இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்கள் வழியாக பயணித்து ஆறு மாதங்களுக்கு பின்னர் இந்த பயணம் சென்னையில் வந்து இறுதியாக நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் செய்து வரும் நிலையில், பாத யாத்திரைக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 6 மாதங்கள் பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை அவர்கள் சுமார் 225 ஊர்களில் மக்களை சந்திக்கிறார்.
168 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு சென்று, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக இந்த பயணத்தை அமைக்க இருக்கிறது. ராமேசுவரத்திலிருந்து பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தலைமையில் என் மண் என் மக்கள் யாத்திரை வருகிற 28 -ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தொடங்கி வைக்கவுள்ளாா்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் இந்த நடை பயணம் மூலம் தமிழ்நாட்டில் கிராமங்கள், சிறு நகரங்கள், நகரங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் பாஜகவை கொண்டு செல்லும் முயற்சியில் அண்ணாமலை ஈடுபட உள்ளார். இந்த நடை பயணம் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடை பயணத்தின் போது மக்களிடம் உள்ள புகார்களை கேட்டு பெறுவதற்கு "மக்கள் புகார் பெட்டி" கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர். நேற்று தமிழக பாஜக மூத்த தலைவர்களின் தலைமையில், பிரதமர் மோடியின் தமிழ் முழக்கம் என்று தலைப்பின் கீழ் என் மண் என் மக்கள் பாத யாத்திரை தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருந்தது.
இதையொட்டி, நேற்று பாஜக தரப்பில் இருந்து சென்னையில் பாத யாத்திரை தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, பாஜக மூத்த தலைவர்கள் அனைவரும் இந்த பாதயாத்திரை தொடர்பாக முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். பாஜக மூத்த தலைவர்களான பொன் ராதாகிருஷ்ணன், எச். ராஜா மற்றும் வானதி சீனிவாசன் என பலரும் கலந்து கொண்டு இருந்தார்கள்.
குறிப்பாக இந்த பாதயாத்திரை எந்த மாதிரியான தாக்கத்தை தமிழக அரசியலில் ஏற்படுத்தும் என்பது தொடர்பாகவும் அவர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் பொழுது, பாஜகவின் எம்எல்ஏவும் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவியும் ஆக இருக்கும் வானதி சீனிவாசன் அவர்கள் நேற்று தொடங்கி வைத்து இருக்கிறார். விடியல முடியல என்ற ஹேஸ்டாகுடன் இந்த ஒரு புகார் பெட்டி இணைந்து இருக்கிறது.