டேய் கலையலங்காரம் செட்டை மாத்துப்பா...! திடீரென பேசுபொருளான நீட்...! அம்பலமாகும் பரபர பின்னணி...!
அம்பலமானது நீட் நாடகம்...! பின்னணியில் இதுவா......?
இந்தியா முழுவதும் மருத்துவம் படிப்பதற்காக ஒரு நுழைவுத் தேர்வாக கருதப்படுகின்ற நீட் தேர்விற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் பலத்தை எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழகத்திலும் இந்த நீட் தேர்வால் சில மாணவ மாணவிகள் உயிரிழந்த சம்பவமும் தமிழகத்தில் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியது.
சாதாரண நடுத்தர வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவர்களால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாதா என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் முடியும் என்ற நம்பிக்கையை கடந்த முறை நடைபெற்ற நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்று மாணவர்கள் நிரூபித்துக் காட்டினார்கள்.
இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த சனிக்கிழமை அன்று எண்ணித் துணிக என்ற தலைப்பில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது அந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர் என் ரவி பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் உரையாற்றினார்.
அந்த கலந்துரையாடலின் பொழுது சில கேள்விகள் பெற்றோர் பக்கம் இருந்தும் கேட்கப்பட்டது அந்த வகையில் சேலத்தைச் சேர்ந்த ஒரு மாணவரின் தந்தையாக அமாசியப்பன் ராமசாமி நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெறுகின்றனர் இருப்பினும் நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம், அதற்கான மசோதாவில் எப்பொழுது கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்துவீர்கள் என்று கேள்வி எழுப்பினார் அதற்கு தமிழக ஆளுநரும் நீட் விலக்கு மசோதாவிற்கு நான் ஒருபோதும் ஒத்துழைக்க மாட்டேன் கையெழுத்தும் இடமாட்டேன், நெவர் எவர் என்ற வகையில் பதில் அளித்தார்.
இதற்குப் பிறகு சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த செல்வசேகர் மகனான ஜெகதீஸ்வரன் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததால் அதன் விரத்தியை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார், தன் மகனின் உயிரிழப்பை தாங்க முடியாமல் தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற்று அதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில் அதிகம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் பெரும்பாலான மாணவர்கள் தங்களது சொந்த முயற்சியால் வீட்டிலிருந்தே படித்து தேர்ச்சி பெற்றேன் என்று கூறியவர்கள் அதிகம்!