உலக அரங்கில் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்ட ரிஷி சுனக்...! எல்லாருமே சங்கியா என கதறலை துவங்கிய இடதுசாரிகள்...!
நான் இந்துவாக வந்துள்ளேன்...! இடதுசாரிகள் முகத்தில் கரியை பூசிய ரிசி சுனக்...!
ரிஷி சுனக் இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இங்கிலாந்து நாட்டில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகிய போது100 எம்பி களுக்கு மேலாக இருந்தால் தான் பிரதமராக முடியும் என்ற நிலையில் 100க்கும் மேற்பட்ட எம்பிகளைக் கொண்டு இங்கிலாந்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார் ரிஷி சுனக்.
இது மட்டுமல்லாமல் இங்கிலாந்தில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் போது ரிஷி சுனக்கிற்கு எதிராக ஒரு பெண்மணி எதிர்த்துப் போரிட்டதும் குறிப்பிடத்தக்கது இந்நிலையில் அந்தப் பெண்மணிக்கு 39 எம்பிக்கள் மட்டுமே இருந்ததால் அதிக எம்பிகள் இருந்த அடிப்படையில் ரிஷி சுனக் பிரதமராக நியமிக்கப்பட்டார் மேலும் இவர் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது 250 செல்வந்தர்கள் பட்டியலில் இருப்பவரும் இங்கிலாந்தில் முதல் முறையாக வழக்கத்திற்கு மாறாக ஒருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று கூறினால் அது ரிஷி சுனக் தான்.
பொதுவாக இங்கிலாந்து நாட்டில் அந்த நாட்டினர்தான் பதவிகளில் அதிகமாக இருக்கும் நிலையில் ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது,
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்று கூறப்படும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது 42 வயதிலேயே இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இது மட்டும் இல்லாமல் இங்கிலாந்து நாட்டின் 200 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர் ஒருவரே என்ற பெருமையை பெற்றுள்ளார் இத்தகைய சிறப்பு வாய்ந்த இங்கிலாந்து பிரதமர் இந்தியாவின் சுதந்திர தினத்தன்று ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பங்கு பெற்று உரையாற்றியுள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.
அதாவது இந்திய நாட்டின் சுதந்திர தினத்தன்று இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆன்மீக தலைவரான மொராரி பாபு சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார் மேலும் ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கிய இந்த சொற்பொழிவு இருபதாம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் இங்கிலாந்து பிரதமர் சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு சிறப்புரையாற்றினார்
மேலும் ரிஷி சுனக் தனது உரையில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமானது என்றும் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நம்பிக்கை தான் கைகொடுக்கும் என்று கூறியதோடு நான் இங்கு பிரதமராக வரவில்லை ஓர் இந்துவாக வந்திருக்கிறேன் என்று கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது பிரதமராக இருப்பது கௌரவமான ஒன்று ஆனால் அது மிகவும் எளிமையானது அல்ல நம்பிக்கை என்ற ஒன்று இருப்பதால்தான் தைரியத்துடனும் மன வலிமையுடனும் நாட்டிற்கு தேவையான நன்மைகளை என்னால் செய்ய முடிகிறது என்று நம்பிக்கையின் மகத்துவத்தை இங்கிலாந்து பிரதமர் எடுத்துரைத்தார்