அரசியலில் இல்லாவிட்டாலும் கருப்புச்சட்டை கும்பலை சுளுக்கெடுத்த சூப்பர் ஸ்டார்..! அர்த்தமாயிந்தா ராஜா...!
கதறும் இடதுசாரிகள்...! கண்டுகொள்ளாமல் சனாதன தர்மத்தை போற்றும் சூப்பர் ஸ்டார்...!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகவும் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட ரஜினிகாந்த் தனது படம் ஒவ்வொன்றும் வெளியாவதற்கு முன்பாக ஆன்மீக பயணமாக இமயமலை சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இருப்பினும் கொரோனா காலகட்டம் அதற்குப் பிறகு அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தொடர்ந்து நான்காண்டுகளுக்கு சூப்பர் ஸ்டாரால் இமயமலை செல்ல முடியவில்லை, கடைசியாக 2019 ஆம் ஆண்டு அண்ணாத்த படம் வெளியாவதற்கு முன்பு அவர் இமயமலை சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் தற்போது வெளியான ஜெயிலர் படத்தின் வெளியிட்டிற்கு முன்பாக அவர் இமயமலை பயணம் சென்றார்.
எப்போதெல்லாம் இமயமலை செல்கிறாரோ அப்போதெல்லாம் தனக்கு மன அமைதியும் தன்னம்பிக்கையின் கிடைப்பதாக கூறியவர், அந்த ஆன்மீகம் பயணம் முழுவதும் சாதாரண மனிதர்களைப் போல உலா வருவதையே சூப்பர் ஸ்டார் எப்பொழுதும் விரும்புவாராம். இந்த நிலையில் இமாலய பயணத்தை முடித்த பிறகு ஜார்கண்ட் ஆளுநரான சி.பி. ராதா கிருஷ்ணனை சந்தித்து அவர்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத் தலைமையகத்திற்கு சென்றுள்ளார்.
இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த பொழுது சின்ன மஸ்தா தேவியை வழிபடுவது தனது நீண்ட நாள் கனவாகவும் இனிமேல் வருடா வருடம் இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவதாகவும் தெரிவித்துள்ளார். அங்கு இருக்கும் துறவிகளை சந்தித்த சூப்பர் ஸ்டார் உத்தரப்பிரதேசம் சென்று முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்து அவரிடம் ஆசி வாங்கினார்...
மேலும் லக்னோவை அடைந்த ரஜினிகாந்த் அம்மாநிலத்தின் கவர்னர் ஆனந்தி பென் படேலை சந்தித்துள்ளார். அதற்குப் பின்பு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.