மாணவிகள் பூ, பொட்டு வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியர்.. பள்ளியை முற்றுகையிட்ட இந்து முன்னணி..

Update: 2023-09-04 13:01 GMT

பள்ளி மாணவிகளை பூ, பொட்டு வைக்க கூடாது என்று தலைமை ஆசிரியர் சொன்னதற்கு தற்பொழுது பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ஊரில் தான் இந்த ஒரு சர்ச்சை அரங்கேறி இருக்கிறது. பள்ளி என்றால் ஏற்கனவே அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும். குறிப்பாக அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாட்டுகளை அவர்கள் விதிப்பார்கள். இதற்கு பல்வேறு சம்பவங்களும் கடந்த காலத்தில் நடந்திருக்கிறது குறிப்பாக பள்ளி மாணவர்கள் தங்களுடைய மத கயிறுகளை அணிந்து வரக்கூடாது மற்றும் மதங்களை பரப்பும் விதமாக உடைகளையும் அவர்கள் தவிர்க்க வேண்டும் என்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.

மாணவர்கள் அனைவரும் பள்ளியில் ஒன்று போல தான் இருக்க வேண்டும் என்று என்பதற்காக தான் ஏற்கனவே பள்ளி சீருடை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பள்ளி சீருடை கூட பரவாயில்லை, அவர்கள் பொட்டு வைக்க கூடாது, பூ வைக்கக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகளும் தற்போது விதிப்பதாக பள்ளி மாணவிகள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.  


தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் இது போன்ற சம்பவங்கள் தற்போது நடந்து இருப்பது இது முதல் முறை கிடையாது. கடந்த காலங்களில் மாணவிகள் கொலுசு அணியக்கூடாது என்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு இருந்தது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ள ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தான் இந்த ஒரு சம்பவம் நடந்தேறி இருக்கிறது. அங்கு இருக்கும் தலைமை ஆசிரியர் மாணவிகளை நீங்கள் பூ வைக்க கூடாது, பொட்டு வைக்க கூடாது என்றெல்லாம் புதிய உத்தரவை போட்டு இருக்கிறார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஏத்த கோவில் சாலையில் அமைந்துள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1400க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் ஜெயசீலி கடந்த சில நாட்களாக பொட்டு வைக்கக்கூடாது, பூ வைக்கக்கூடாது, தோடு அணியக்கூடாது என தினமும் காலை நடைபெறும் பிரேயரில் உத்தரவிட்டதாக மாணவிகள் தங்களது பெற்றோர்கள்களிடம் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு பெற்றோர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் ஏன் முன்பு இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை. தற்பொழுது தான் இந்த தலைமை ஆசிரியர் புதிது புதிதான கட்டுப்பாடுகளை கொண்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். 

இத்தகவலறிந்த இந்து முன்னணியினர் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி சார்பு ஆய்வாளர் சவரியம்மாள்தேவி தலைமையிலான காவல் துறையினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.  


மேலும் தலைமை ஆசிரியர் ஜெயசீலியை அழைத்து இந்து முன்னணியினர் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து இதுபோன்ற குற்றசாட்டு இனிமேல் வராது என்று அப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலி உறுதி கூறியதன் அடிப்படையில் இந்து முண்ணனியினர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

கிராமத்திலேயே இது போன்ற கட்டுப்பாடுகளை விதித்தால் நகரங்களில் பள்ளிக்கூடங்களில் எத்தகைய கட்டுப்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் பின்பற்றுவார்கள் என்று இந்து முன்னணியினர் தங்களதுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இனி இதுபோன்ற எங்கள் நம்பிக்கைகளை சிதைக்கும் கட்டுப்பாடுகளை நடவடிக்கை என்ற பெயரில் எடுத்தால் நாங்கள் மீண்டும் களத்தில் போராட இறங்குவோம் என இந்து முன்னணியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News