பாரதம் நமக்கு புதுசல்ல: ஆதி புராணம் தொடங்கி ஆதார் வரை பின்தொடரும் "பாரதம்" - ஓர் அலசல்!
பாரதமா அல்லது இந்தியாவா?
ஆன்மீக செல்வத்தின் உறைவிடமாய் பாரதம் திகழ்ந்தாலேயே நம் நாட்டிற்கு பாரதம் என்ற பெயர் வந்தது. பா – என்ற சமஸ்கிருதச் சொல்லிற்குச் “ஒளி” என்று பொருள் உண்டு. இதனாலேயே உலக இருளை அகற்றும் ஆதவனை பாஸ்கரன் என்று கூறுகிறோம். ஞாயிறு என்பதனை ‘பாநு’ என்று குறிக்கின்றோம். “ரத” என்ற சொல்லிற்கு ‘முழ்கியிருத்தல் — திளைத்திருத்தல்’ என்ற பொருள் உண்டு. எனவே “ஞானத்தில் திளைத்திருந்த பூமி” நம்முடைய நாடு என்பதால் பாரதம் என்ற பெயர் வந்தது.
பாரதத்திலிருந்து இந்தியா வரை
இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டது. காலனித்துவ காலத்திற்குப் பிறகுதான் பயன்பாட்டுக்கு வந்தது.
"பாரத்" என்பது ஒரு பழங்கால சொல். இது இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. மகாபாரத காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புகழ்பெற்ற மன்னர் பாரதத்துடன் தொடர்புடையது. இது நமது பண்டைய நிலத்தின் வீரம் , மரபு மற்றும் பெருமையை பிரதிபலிக்கிறது. அப்படியென்றால் ஏன் ஆங்கிலேயர்கள் பாரதத்தின் பெயரை இந்தியா என்று மாற்றினார்கள்?
"பாரத்" என்ற சொல் கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு நேர்மாறாக, "இந்தியா" என்ற பெயர் மிகவும் நடுநிலையாகக் கருதப்பட்டது. இது ஆங்கிலேயர்களுக்கு அவர்களது கட்டுப்பாட்டை நிறுவதை எளிதாக்கியது. அவர்கள் தேவைக்கு இந்தியா என்ற பெயர் தேவைப்பட்டது. நமக்கே உரித்தான சொந்தப் பெருமை “பாரதம்” என்ற பெயர் இருக்கும்போது காலனித்துவப் பெயரை ஏன் ஒட்டிக்கொள்ள வேண்டும்?
பாரதம் என்ற பெயர் எங்கிருந்து வந்தது?