நேற்று பெய்த மழையில் முளைத்த ஈசல் - உதயநிதிக்கு எதிராக ஆவேசமாக குதித்த மன்னார்குடி ஜீயர்...!

Update: 2023-09-09 13:41 GMT

களத்தில் இறங்கிய மன்னார்குடி ஜீயர்

எந்த ஒரு மாநில அரசியலாக இருந்தாலும் அதில் பேசப்படும் பேசு பொருட்கள் மட்டும் வாரத்திற்கு வாரம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும் அந்த வகையில் தற்போது தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு பற்றி பேசிய கருத்துக்களே தமிழகம் தாண்டியும் பிற மாநில அரசியலிலும் பேசு பொருளாக உள்ளது.

பொத்தாம் பொதுவாக, உதயநிதி சனாதன தர்மம் ஒழிக்க வேண்டும், அவற்றால் மக்கள் துன்புறுகின்றனர் என சிலவற்றை கூறி அந்த துன்புறுதல் அனைத்திலிருந்து திராவிட கட்சிதான் மக்களை மீட்டு உள்ளது என்று தெரிவித்து சாதனத்தை ஒழித்தே ஆக வேண்டும் என்பதில் உறுதி இருப்பதாக கூறினார்..

ஆனால், 'உண்மையில் தனாதனம் என்பது அனைத்து மதத்தையும் தாண்டி மக்கள் ஒவ்வொருவரும் கொண்டுள்ள நம்பிக்கை அவை இல்லாமல் எந்த ஒரு நாளும் நகராது, பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறோம் அது சனாதனம், அமாவாசை அன்று இறந்தவர்களை நினைவுகூர்ந்து படையல் இடுகிறோம் அதுவும் சனாதனம், ஆதியும் முடிவும் இல்லாத ஒரு தர்மம் சனாதன தர்மம், நாம் செய்யக்கூடிய வாழ்வியல் முறையில் சனாதன தர்மம் கலந்திருக்கிறது, இந்து தர்மமும் கலந்திருக்கிறது குலதெய்வ வழிபாடு செய்கிறோம் அதுவும் சனாதன தர்மம் தான்! இது அனைத்தும் கோயிலுக்கு செல்பவர்களுக்கு தெரியும் ஆனால் கோவிலில் இருக்கும் உண்டிகளுக்காக செல்பவர்களுக்கு எப்படி தெரியும் சனாதன தர்மத்தை பற்றி? என்று அண்ணாமலை தனது இரண்டாம் கட்ட நடை பயணத்தின் பொழுது உதயநிதியின் கருத்திற்கு பதிலடி கொடுத்ததோடு சனாதனத்திற்கு தெளிவான விளக்கத்தையும் அளித்தார்.

மேலும் ஆளுநரிடம் சனாதன தர்மம் குறித்து தவறான கருத்துக்களை பரப்பிய உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி தர வேண்டும் என்று பாஜக சார்பில் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகமும் தாண்டி டெல்லி, மகாராஷ்டிரா, பீகார் போன்ற பல மாநிலங்களில் இருந்தும் எதிர்ப்புகள் உதயநிதிக்கு எழுந்துள்ளது அவர்களது ஆசை கூட்டணையான இந்தியா கூட்டணியிலும் உதயநிதிக்கு எதிரான கருத்துக்கள் நிலவுவதை நாம் செய்திகளை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மன்னார்குடி ஜீயர் ஒரு நாட்டின் அரசாங்கம் என்பது ஜாதி மதங்களையும் கடந்து அனைவரையும் பொதுவாக பார்க்க கூடியது ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கையை கெடுக்கும் வகையில் இருக்கக் கூடாது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய அனைத்திற்கும் அவர் பலனை அனுபவிப்பார் என்றும், இந்து மதத்திற்கும் இந்து நம்பிக்கைகளுக்கு விரோதம் அளிக்கும் விதமாக பேசுபவர்கள் யாரும் இந்த நாட்டில் இருக்கவே கூடாது என்றும், ஒருவேளை உதயநிதிக்கு அவ்வளவு தைரியம் இருந்தால் சர்ச், மசூதிக்குச் சென்று நீங்கள் கூறுவது தவறு என்று அவரால் கூற முடியுமா? வடமாநில சாமியார் ஒருவர் உதயநிதியின் கலுத்திற்கு 10 கோடி என்று விலை நிர்ணயித்துள்ளார்.

அது தவறானது என்று கூற முடியாது ஏனென்றால் சனாதனம் எங்களது தாய்க்கு இணையானது, நேற்று பெய்த மழையில் முளைத்த ஈசல் போல் இருந்து கொண்டு தங்களை கழுகு என்று நினைத்து சிறகடித்து உயர பறக்க வேண்டும் என்று ஆசை கொண்டால் கீழே தான் விட முடியும் என்றும் மன்னார்குடி ஜீயர் தெரிவித்து உதயநிதியின் கருத்திற்கு தனது நிலைப்பாட்டை உறுதி செய்தார். இது அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை பெற்றுள்ளது.

ஆக மொத்தம் உதயநிதியை சிறப்பு அழைப்பாளராக அழைத்து சிறப்பாக செய்துவிட்டது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுமட்டுமில்லாமல் தேசிய அளவில் திமுக இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் சிக்கிவிட்டதாக வேறு பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன.

Similar News