இன்டர்நேஷனல் லெவலில் சந்தி சிரிக்கும் சின்னவர்....! மலேசியாவில் கொந்தளித்த இந்து அமைப்புகள்...!

Update: 2023-09-09 13:47 GMT

அப்போ விஷயம் இன்டர்நேஷனல் லெவல்ல போயிடுச்சா..?

தமிழர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன விவகாரம் தான் தற்பொழுது அரசியல் ரீதியாக பேசப் பொருளாக மாறி இருக்கிறது. இதுவரையில் அவர் பேசி நான்கு நாட்களைக் கடந்த பிறகும் உதயநிதி பேசியது தவறு என பல்வேறு தரப்பினரும் பல்வேறு அமைப்பினரும் தங்கள் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் உதயநிதிக்கு எதிர்ப்புகள் குவிகின்றன.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில், தி.மு.க இளைஞர் அணிச் செயலாளரும், தமிழ்நாடு மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்போது பேசிய அவர், "சனாதன எதிர்ப்பு மாநாடு" எனக் குறிப்பிடாமல், ‘சனாதன ஒழிப்பு மாநாடு" எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. அதற்கு என்னுடைய வாழ்த்துகள் என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர் சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும் என பேசி இருந்தார். இவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து, எதிர்ப்புகள் கிளம்பின.

அதனை தொடர்ந்தது பேசிய உதயநிதி ஸ்டாலின் நான் ஒன்றும் தப்பாக பேசவில்லை, நான் பேசியதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என தெரிவித்தார்.

இதனால் தேசிய அளவில் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதான தர்மம் குறித்து பேசிய பேச்சு தொடர்ந்து சர்ச்சை ஆனது. இந்நிலையில் அவருக்கு எதிராக மலேசியாவில் உள்ள 28 சமயம் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பை சமர்ப்பித்திருக்கின்றார்கள்.

இதுகுறித்து மலேசியா இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூறும் பொழுது, 'உதயநிதி சனாதனம் குறித்து பேசியது எங்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது அவர் இதுபோல் பேசியிருக்கக் கூடாது. சனாதனம் என்பது வாழ்க்கை முறை அதை புரிந்து கொள்ளாமல் உதயநிதி பேசிவிட்டார், இதற்கு மலேசியாவில் இருக்கக்கூடிய 28 இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன. இதன் புகாரை மலேசிய தூதராகத்தில் நாங்கள் கொடுத்துள்ளோம்' என கூறினார்கள். மேலும் அங்குள்ள இந்து அமைப்பினர்களிடம் பேசிய பொழுது அவர்கள் கூறியதாவது சனாதன தர்மம் என என்னவென்று தெரியாமல் பேசிவிட்டார் உதயநிதி இது கண்டிப்பாக அவருக்கு பின் விளைவை ஏற்படுத்தும் என தெரிவித்தனர்.

தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்க கூட்டத்தில் உதயநிதி பேசியது திமுகவிற்கு அரசியல் ரீதியாக நாளுக்கு நாள் பின்னடைவை ஏற்படுத்தி வருவது மட்டுமல்லாமல் பல்வேறு எதிர்ப்புகளையும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து சம்பாதித்துக் கொடுத்துள்ளது. இதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் எல்லாம் திமுக கூட்டணியில் உள்ளவர்களும், திமுகவை சார்ந்த திரையுலகத்தினரும்தான் இதற்கு ஆதரவு கொடுத்து வந்தனர்.

ஆனால் இதனை எதிர்ப்பவர்கள் எல்லாம் அரசியல் சாராத கட்சிகள் மற்றும் பொது அமைப்பினர்தான் இதனை எதிர்க்கின்றனர். இதன் காரணமாக திமுகவிற்கு இது பின்னடைவே ஏற்படுத்தும் என பல்வேறு அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன, ஆனாலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து இதுவரை மறுப்போ அல்லது வருத்தமோ தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தை திமுக பெரிது படுத்த தான் நினைக்கிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியிலும் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா ஏன் திமுக நீண்ட காலமாக கூட்டணி வகிக்கும் காங்கிரஸ் கூட இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலும் திமுக இதன் விபரீதத்தை புரிந்து கொள்ளவில்லை என கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன

Similar News