திமுக சொன்னதும்! வரலாற்றில் நடந்ததும்! உடன் கட்டை ஏறும் பழக்கத்திற்கு பின்னால் யார்? ஓர் அலசல்!
இந்து மதத்தில் தான் கணவன் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருக்கிறது. ஈவெ.ராமசாமி நாயக்கர் போன்றோர் தான் அதனை எல்லாம் ஒழித்தனர் என்பது போலவும் திமுகவினர் சொல்லிக்கொள்கின்றனர். ஆனால் இதற்கு பின்னால் நடந்த வரலாறே மூடி மறைக்கப்பட்டது யாருக்கு தெரியும்? அதனை தெரியவிடாமல் மறைத்து, தாங்கள் தான் முற்போக்கு சிந்தனை மூலம் மூட நம்பிக்கைகளை ஒழித்தோம் என திராவிட இயக்கங்கள் சொந்தம் கொண்டாடி வருகிறது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
உடன்கட்டை ஏறல்
"உடன்கட்டை ஏறல்" என்பது, ஒரு இந்து சமயச் சடங்கு ஆகும். கணவனை இழந்த மனைவி தன் கணவரின் சடலம் தீ மூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளுதல் தான் உடன்கட்டை ஏறுதல் என தவறாக கருத்தாக மக்களை எண்ணவைத்துவிட்டனர். அன்னியர்கள் , குறிப்பாக முகலாயர்கள், பெண்ணின் கணவர்களை கொன்று, பெண்களின், கற்பை சூரையாட முனையும் போது, அவள் தனது கற்பைக்காக்க , இந்த உடல் அன்னியர்களிக்கு போவதைவிட அக்கினிக்கு போவதே மேல் என அக்கினியில் விழுந்து உயிரைவிட்டனர். குறிப்பாக, சித்தூர் ராணி பத்மினி ஒரு உதாரணம். இதை அன்னியர்கள், குடும்ப கலாச்சார பெண்களை அழிக்கவும், இந்துமத்த்தில், மூடநம்பிக்கை இருப்பதுபோல் ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்திவிட்டனர். இதை, இந்துக்களையும் நம்பவைத்து, மூடநம்பிக்கையாக சிதகயில் விழ கட்டாயப்படுத்தினர்.
இராஜாராம் மோகன்ராய் வந்தார் வென்றார்
பிராமணர்களுக்கு எதிராக திராவிட இயக்கங்கள் என்னென்னவோ சொல்லி, அவர்களை காயப்படுத்த பார்க்கின்றன. ஆனால் உடன் கட்டை ஏறுதல் என்பது மூட நம்பிக்கை. அதனை ஒழிக்க வேண்டும் என முதலில் களம் இறங்கியதே பிராமணர் இராஜாராம் மோகன்ராய் தான். 1815 இற்கும் 1818 இற்கம் இடைப்பட்ட காலத்தில் வங்காள மாநிலத்தில் உடன்கட்டை ஏறல் 378 இல் இருந்து 839 ஆக அதிகரித்தது. அப்போது உடன் கட்டை ஏறும் பழக்கத்தை இராஜாராம் மோகன்ராய் கடுமையாக எதிர்த்தார்.