"களப்பணியை விட்றாதீங்கப்பா" என தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் - தோல்வி பயம் காரணமா?

Update: 2021-04-02 13:15 GMT

"களப்பணியை பாருங்கப்பா" என தொண்டர்களை கெஞ்சும் தி.மு.க தலைவர் ஸ்டாலின். தி.மு.க'வின் முக்கிய இடமான கட்சி தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் இன்று காலை முதல் ரெய்டு நடந்து வருவதை முன்னிட்டு தமிழகத்தில் பல இடங்களில் தி.மு.க'வை சேர்ந்த உடன்பிறப்புகள் குழப்பத்தில் உள்ளனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டு முதலில் பிரச்சாரம் துவங்கிய பொழுது தேர்தல் களம் தி.மு.க'விற்கு சாதகமானாக இருந்தது. இதனால் மற்றவர்களை விட தி.மு.க'வினர் உற்சாக மிகுதியில் இருந்தனர். இன்னும் சில மாவட்ட அளவிளான தி.மு.க நிர்வாகிகளோ கடன் வாங்கி தேர்தல் பிரச்சாரத்தில் செலவு செய்தனர். ஆனால் வழக்கம் போல் தி.மு.க'வினரின் பேச்சே அவர்களுக்கு எமனாக அமைந்தது. கரூரில் செந்தில் பாலாஜி "11 மணிக்கு ஆட்சி வரட்டும் 11.05'க்கு மண் திருடலாம்" என கூறினார். கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பெண்களை பற்றி கேவலமாக பேசினார்.


இதனை தொடர்ந்து பாடம் கற்காத தி.மு.க அகம்பாவத்தில் நடந்து கொண்டது துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா முதல்வரின் தாயாரை பற்றி மூன்றாம் தரமாக பேசினார். உதயநிதி கிட்டதட்ட அனைத்து இடங்களிலும் வரம்பு மீறி திமிறாக பேசினார். இதனையெல்லாம் பார்த்து கொண்டிருந்த உடன்பிறப்புகள் தங்கள் ஆட்டத்தை துவங்கிவிட்டனர். சில இடங்களில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் செல்வது, சிசிடிவி கேமரா'வை ஆட்டையை போடுவது என தங்களுக்கு திருட அந்தஸ்து கொடுத்தது போல் நடந்துகொள்ள துவங்கினர்.

இதையெல்லாம் மக்களும் பார்த்துகொண்டிருந்ந வேளையில் கடந்த வாரத்தில் அ.தி.மு.க அதி இடங்களில் வெற்றி பெறும் என பல கருத்து கணிப்புகள் வந்த நிலையில் தி.மு.க'வினர் வாயடைத்து நின்றனர். இன்னும் சிலரோ இது கடந்த பத்து ஆண்டுகளைபோல் இந்த ஆண்டும் நமக்கில்லை என்கிற ரேஞ்சில் மனதை தேற்றிகொள்ள துவங்கினர்.

இந்த நிலையில் பார்த்துகொள்ளலாம் என பல தி.மு.க'வினர் தைரியமாக உலவி வந்ந நிலையில் இன்றைய ரெய்டு தி.மு.க'வினருக்கு இடி விழுந்தது போல் ஆகிவிட்டது. மக்கள் இந்ந ரெய்டினால் தி.மு.க'வினரின் சொத்துக்களை அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறுது எனவும் ஏற்கனவே அ.தி.மு.க வெல்ல வாய்ப்பிருக்கிற நிலையில் இது இன்னும் தி.மு.க'விற்கு பின்னடைவே என தெரிந்துகொண்ட உடன்பிறப்புகள் இந்த ஆண்டும் தி.மு.க தோல்வியை தழுவும் என முடிவெடுத்துவிட்டது தலைமைக்கு தெரிந்து விட்டது.



தன் வாழ்நாள் உழைப்பையும், பணத்தையும் போட்டிருக்கும் ஸ்டாலின் குடும்பம் இந்த முறை தோற்றால் இனி எழவே முடியாது எனவே தொண்டர்களையாவது உயிர்ப்புடன் வைப்போம் என்று இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் "ஒவ்வொரு உடன்பிறப்புக்குள்ளும் தலைவர் கலைஞர் வாழ்கிறார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்கிறார். மரணத்திற்குப் பின்னும் மெரினாவில் தனக்கான இடத்தை சட்டரீதியாகப் போராடி வென்ற தலைவர் கலைஞர் வாழ்கிறார். அவர்தான் 234 தொகுதிகளிலும் தி.மு.கழகக் கூட்டணியின் வேட்பாளராக நிற்கிறார்

அதனை நிரூபித்திடும் வகையில், கழக உடன்பிறப்புகள் களப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள்" என கடிதம் எழுதியுள்ளார். தோல்வியின் பயத்தில் ஸ்டாலின் கதறி எழுதிய கடிதம் இன்று மதியம் முதல் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

Similar News