பெண்கள் பாதுகாப்பில் தி.மு.க - நடந்தது என்ன.?

Update: 2021-04-06 01:45 GMT

மிரட்டல் விடுப்பது, இழிவாக பேசுவது, மானபங்கப்படுத்துவது .. என்று 1989ஆம் ஆண்டு சட்டசபையில் அம்மா ஜெயலலிதாவின் சேலையைக் கிழித்ததில் தொடங்கி சமீபத்தில் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய தலித் பெண் ஒருவரை ஆபாசமாகத் திட்டி தாக்கியது வரை தி.மு.க பெண்களை கீழ்த்தரமாகவே நடத்தி வந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை பிற கட்சிகள் முன்வைக்கின்றன.

தி.மு.க-வின் இந்த அராஜகங்கள் மக்கள் மனதில் பதிந்திருந்தாலும் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அவற்றில் சிலவற்றை நினைவு கூர்வோம். காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த டி.என்.அனந்தநாயகி எங்கே இருக்கிறது திராவிட நாடு என்று கேள்வி எழுப்பியபோது, அந்த நாடாவை அவிழ்த்து பார்த்தால் தெரியப்போகிறது என்று கண்ணியமற்ற முறையில் பேசியவர் கருணாநிதி.

1979ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தமிழகத்துக்கு வந்த போது மதுரையில் போராட்டம் என்ற பெயரில் அவர் மீது தி.மு.க-வினர் கல் எறிந்தனர். இந்த சம்பவத்தில் அவரது தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்ததால் சேலையில் கறையானது. அது பற்றி கேட்கப்பட்ட போது "அம்மையாருக்கு மாதவிலக்காய் இருந்திருக்கும்" என்று கீழ்த்தரமாக பதிலளித்தார் கருணாநிதி.

1989ஆம் ஆண்டு ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் சட்டசபையிலேயே அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த அம்மா ஜெயலலிதாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, சேலையைப் பிடித்து இழுத்து மானபங்கம் செய்தவர்கள் திமுகவினர். மீண்டும் ஆட்சிக்கு வர இயலாத விரக்தியில் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வாராக இருந்த ஜெயலலிதாவை இரட்டை அர்த்த வசனங்களால் அவமானப்படுத்தினார். ஆட்சியில் இல்லாத போதும் இந்த கலாச்சாரத்தை தொடர்ந்த திமுகவினர் போராட்டத்தில் பங்கேற்ற சக பெண் தொண்டரிடமே சில்மிஷம் செய்து தங்களது பண்பாட்டை வெளிப்படுத்தினர்.

பியூட்டி பார்லர் வைத்து சுயதொழில் செய்து பிழைத்து வந்த பெண் ஒருவரை தி.மு.க பிரமுகர் தாக்கிய வீடியோ வைரலானது அனைவருக்கும் நினைவில் இருக்கும். சமீபத்தில் கனிமொழியின் பிரச்சார பயணத்தில் அவரைச் சுற்றி கூட்டம் கூடியதற்காக அவர் முன்னிலையிலேயே தி.மு.க-வினர் பெண்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியதும் செய்தியானது.

பெண்களை இழிவுபடுத்தும், தாக்கும், ஒடுக்கும் பெண் விரோத கலாச்சாரத்தைக் கொண்ட தி.மு.க தான் பெண்ணுரிமையைக் காப்போம் பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடுவோம் என்று கூறுவது நகைப்பை ஏற்படுத்துவதாக மக்கள் கருதுகின்றனர். 

Tags:    

Similar News