தெலுங்கு புத்தாண்டிற்கு வாழ்த்து கூறிய ஸ்டாலின் - பூர்வீக இனப்பாசம் காரணமாக தமிழ் புத்தாண்டை மறந்தாரா?

Update: 2021-04-13 09:45 GMT

அரசியல் என்பது மக்களின் தேவைகள் மறுக்கப்படும் சமயத்தில் அல்லது சரியாக கிடைக்கப்பெறாத சமயத்தில் மக்களிடம் ஏற்படும் கிளர்ச்சியே ஆகும். அந்த கிளர்ச்சியை அறவழி போராட்டமாகவும், வன்முறையாளர்களின் களியாட்டமாகவும், மக்களை சரியான முறையில் தூண்டி அதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே அரசியல் ஆகும். ஆனால் மக்களை பிரித்து சிந்திக்க வைத்து,

மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி அதில் குளிர்காய்வது பெயர் அரசியல் இல்லை குள்ள நரித்தனம். இப்படிப்பட்ட நரித்தனம் காலங்கள் செல்ல செல்ல மாறி வருமே தவிர தன்னை திருத்திக்கொள்ளாது. மக்களையும் திருந்த விடாது. இப்படிப்பட்ட அரசியலைதான் தி.மு.க துவங்கிய காலம்தொட்டு செய்து வருகிறது.

மக்களுக்குள் பிரிவினையை உணர வைத்து அதனை வார்த்தை வாதங்களால் கிளர்ச்சியடைய செய்து பின்னர் ஒரு சாராரை "பார்த்தீர்களா உங்களை புறந்தள்ளுகின்றனர் நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம் எங்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தினால் அனைத்தும் சரியாகும்" என ஒரு சாராரிடம் கெஞ்சி பின் அதை வைத்து ஆட்சிக்கு வந்து அந்த ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் பொழுதெல்லாம் ஒரு சாராரை உசுப்பிவிட்டு "பாருங்கள் நாங்கள் இல்லாவிட்டால் உங்கள் கதி அவ்வளவுதான்" என நம்பவைத்து பிழைப்பை நடத்துவது அரசியல் குள்ளநரித்தனம். இதனை கொச்சமும் குறைவில்லாமல் தி.மு.க காலம் காலமாக செய்து வருகிறது.

இதில் ஒரு பங்குதான் இந்து மத பண்டிகைகளை மடைமாற்றி வேறு விதமாக மாற்றுது அல்லது அந்த பண்டிகைகளை மக்களுக்கு விடுமுறை தினமாக மட்டும் ஞாபகப்படுத்தி மழுங்கடிப்பது. இத்தனை ஆண்டுகாலம் தி.மு.க இதனை சமயோசிதமாக செய்து வருகிறது. ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி.

ஆனால் தமிழ் புத்தாண்டு நாளை தமிழகம் முழுவதும் இந்து சமுதாய மக்களால் கொண்டாடப்படும் வேளையில் இன்று அதனை பற்றி வாய் திறக்க மனமின்றி தி.மு.க தலைவர் அமைதி காத்து வருகிறார். இருப்பினும் "தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்" என்பது போல் மறக்காமல் தன் பூர்வீக இனமான தெலுங்கு மக்களுக்கு மட்டும் உகாதி புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி வாய் நிறைய சிரிப்புடன் தன் ட்விட்டர் பதிவை இட்டுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், "திராவிட மொழிக் குடும்ப உறவின் அடையாளமான தென்னிந்திய நிலப்பரப்பைச் சேர்ந்த தெலுங்கு - கன்னட மொழி மக்களுக்கு இனிய உகாதி புத்தாண்டு வாழ்த்துகள்!

அவரவர் மொழிகளையும், பண்பாட்டுக் கூறுகளையும் போற்றிப் பாதுகாத்து, ஆதிக்கத்திற்கு இடமின்றி, அன்பால் இணைந்து சகோதரத்துவம் காத்திடுவோம்" என பதிவேற்றி உள்ளார்.

ஆனால் நாளை கொண்டாடப்படவிருக்கும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக்கு மட்டும் தி.மு.க தலைவரிடம் இருந்து அமைதியோ அமைதி, ஏன் தெலுங்கு இனப்பாசமா? அல்லது இங்கே இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து கூறாமல் விட்டால்தான் மேற்கூறியது போல் மற்ற மதங்களின் பாதுகாவலர் என்ற குள்ளநரித்தன அரசியல் செய்ய முடியும் என்ற நிலைப்படா என விமர்சகர்கள் வாதத்தை முன் வைக்கின்றனர்.

ஆனாலும் இந்துக்கள் வாக்கு வங்கி உருவான பிறகும் தி.மு.க இப்படி இந்துக்கள் எதிரியாக காய் நகர்த்தினால் அது தி.மு.க'வின் இறுதிக்காலம் என தி.மு.க'வினரே புலம்பும் அளவிற்கு உள்ளது நிலைமை.

Similar News