கலைஞர் 100 விழா என திரைத்துறையை வைத்து அசிங்கப்பட திமுக... விஜய், அஜித் கூட மதிக்கவில்லை!

Update: 2024-01-08 04:32 GMT

புறக்கணித்த ரசிகர்கள்! காலி இருக்கைகளால் நொந்துபோன திமுக! 


கடந்த 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டில் திமுக ஆட்சி நடைபெற்ற பொழுது கருணாநிதி அவர்களுக்கு பல பாராட்டு விழாக்கள் நடைபெற்றது. 2006 இல் திரை உலகம் சார்பாக திரை உலகிற்கு பல்வேறு சலுகைகளை வழங்கியதாக கூறி முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்ற பொழுது, ரஜினி, கமல், இளையராஜா, அசின், த்ரிஷா, குஷ்பூ, ராதிகா, விக்ரம், விஜய் என முன்னணி நடிகர்களும் முக்கிய இயக்குனர் மற்றும் திரை உலகை சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டனர். கலந்து கொண்டது மட்டுமின்றி பல நடன நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி பாக்யராஜ் கதையில் விவேக் நாடகமும் நடைபெற்றது. மேலும் கலைஞர் கருணாநிதி இந்த நிகழ்ச்சியில் பேசி தனக்கு பாராட்டு விழா தெரிவிப்பதற்கு நன்றியும் தெரிவித்தார்.. அதோடு மாநிலங்களில் எடுக்கப்படும் திரைப்படங்கள் அனைத்திற்கும் அந்தந்த மாநிலங்களில் தணிக்கை செய்யப்பட வேண்டும் எனவும் ஒவ்வொரு மாநில அரசும் மாநிலங்களில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார். 


இதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டிலும் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடைபெற்றது . இந்த விழாவும் விமர்சியாக நடைபெற்றது கூட்டமும் பெருவாரியாக கூடியது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து கலைஞரின் நூற்றாண்டு விழாவை பல வகைகளில் கொண்டாடி வருகிறது. 


அந்த வகையில் திரைத்துறை சார்பில் கருணாநிதிக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கலைஞர் 100 விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் இவ்விழா கடந்த 2023 டிசம்பர் 24ஆம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது ஆனால் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்பால் ஜனவரி 6 ஆம் தேதிக்கு நிகழ்ச்சி மாற்றப்பட்டது. அதுமட்டுமின்றி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருந்த இந்த நிகழ்ச்சி கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கும் மாற்றப்பட்டு நேற்று நடைபெற்றது. கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இருவரும் முன்னிலை வகிப்பார்கள் என்றும் கூறப்பட்டது மேலும் நடிகர் தனுஷ், சூர்யா, நயன்தாரா, கார்த்தி, அருண் விஜய், ஜெயம் ரவி, ஆர் ஜே பாலாஜி, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ரோஜா, வடிவேலு, இயக்குனர் வெற்றிமாறன் போன்ற பலரும் இதில் கலந்து கொண்டனர். 


அதுமட்டுமின்றி நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது இருப்பினும் இவ்விருவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் ஆகிய பிரபலங்கள் இதில் கலந்துகொண்ட போதிலும் பெருமளவிலான கூட்டம் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை! 



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் பொழுது கூட இந்த நிகழ்ச்சியில் பெருவாரியான காலி இருக்கைகளை இருந்ததாக கூறப்படுகிறது அது மட்டும் இன்றி காலி இருக்கைகள் அதிகமாக இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கடந்த திமுக ஆட்சி காலங்களில் நடைபெற்ற விழாக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது, ஆனால் இந்த முறை ரஜினி, கமல் பங்குபெற்றும் கூட அதிக கூட்டம் வரவில்லை ஏனென்றால் தற்பொழுது திரையுலகம் அனைத்துமே திமுகவின் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக மக்கள் உணர்ந்த காரணத்தினால் தான் என விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதனால் திரையுலகம் கூறுவதை குறிப்பாக திரை உலகத்தினர் அரசியல் பேசுவதை மக்கள் நம்ப தயாராக இல்லை மக்கள் விழித்துக்கொண்டனர் எனவும் அதன் விளைவாகவே இது எனவும் இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Similar News