'மாசம் 1000 ரூபாய் கொடுக்கலைன்னு ஓட்டை மாத்தி போட்டுடாதீங்கம்மா?' - ஈரோடு கிழக்கில் கெஞ்சிய முதல்வர் ஸ்டாலின்

Update: 2023-02-26 02:06 GMT

குடும்பத்தலைவிகளே உங்களுக்கு 1000 ரூபாய் கொடுக்காததை மனதில் வைத்துக்கொண்டு இடைத்தேர்தலில் வாக்குகளை மாற்றி குத்திவிடாதீர்கள் என முதல்வர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது, இதன் காரணமாக திமுக, அதிமுக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்கு சேகரிக்க இன்று முழுவதும் ஈரோடு கிழக்கு தொகுதியை சுற்றி பிரச்சாரம் செய்தார். மேலும் அனைத்து திமுக அமைச்சர்களும், ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்வர் ஸ்டாலினுடன் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத வகையில் இடைத்தேர்தலுக்கு முதல்வர் சென்று பிரச்சாரம் செய்வது இதுவே முதல்முறையாகும்.

மேலும் கடந்த சில நாட்களாக ஈரோடு கிழக்கில் வாக்காளர்களை சுற்றுலா அழைத்து செல்வது, ஒரே இடத்தில் அடைத்து வைத்து 3 வேளை அசைவ சாப்பாடு போட்டு மாலை 500 ரூபாய் கொடுத்து வாக்காளர்களை அனுப்பிவைப்பது, கொலுசு, குக்கர் கொடுப்பது என திமுக கூட்டணி செய்தும் மக்கள் மத்தியில் குடும்பத்தலைவிக்கு 1000 ரூபாய் கொடுக்கிறோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றவில்லை என்ற குறை அனைத்து தரப்பு இருக்கிறது குறிப்பாக குடும்பத்தலைவிகளிடம் இருக்கிறது இதுவே திமுக கூட்டணிக்கு தோல்விக்கு வழிவகுக்கும் என உளவுத்துறை முதல்வரிடம் அறிக்கை கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த இடைத்தேர்தல் வெற்றி திமுகவிற்கு முக்கியமானதாக பார்க்கப்படும் நேரத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தோற்றால் அது திமுக கூட்டணிக்கு கண்டிப்பாக பின்னடைவை ஏற்படுத்தும் என நன்கு உணர்ந்த அறிவாலய தரப்பு எப்பட்டியாவது இந்த தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என இறங்கியதன் விளைவுதான் கடந்த வாரம் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தில் குடும்பத்தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை பற்றி இன்னும் 5 மாதத்தில் முதல்வர் நிச்சயம் அறிவிப்பார் என கூறியது. அதன் தொடர்ச்சியாக இன்றைய பிரச்சாரத்திலும் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் குறித்த அறிவிப்பை கொடுத்துள்ளார்.

.

இன்று ஈரோடு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார், அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் ஈரோடு தொகுதி குறித்தோ, வளர்ச்சி பணிகள் குறித்தோ பேசவில்லை திமுக வாக்குறுதியாக குடும்பத்தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் என்ற வாக்குறுதியை பற்றித்தான் பேசினார்.

1000 ரூபாய் வாக்குறுதி பற்றி குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், 'மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்குவது குறித்து வரும் மார்ச் மாதத்தில் சட்டப்பேரவையில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும்' என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், 'இந்த இடைத்தேர்தல் என்பது ஒரு எடை தேர்தல், இந்த ஆட்சி எப்படி இருக்கு, தேர்தல் நேரத்தில்

சொன்னதெல்லாம் நிறைவேற்றினார்களா? முறையாக இந்த ஆட்சி நடக்கிறதா என்பதை எடை போட்டு நீங்கள் வழங்க வேண்டிய தீர்ப்பு, அந்தத் தீர்ப்பை வழங்கத் தயராகி விட்டீர்களா?

கை சின்னத்தில் வாக்களிப்பீர்களா?' என முதல்வர் ஸ்டாலின் சந்தேகத்துடனேயே மக்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.

என்னதான் திமுக ஈரோடு கிழக்கில் அமைச்சர்களை குவித்து தேர்தல் வேலைகளை செய்து வந்தாலும், முதல்வர் மருமகன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சென்று தொழிலதிபர்களை பார்த்து பேசிவிட்டு வந்தாலும் தோல்வி பயம் திமுகவிற்கு அதிகமாக இருப்பது முதல்வரின் இன்றைய பேச்சில் தெரிந்தது.

மேலும் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் வெளியூர் ஆட்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்க அனுமதியில்லை என்ற காரணத்தினால் அனைத்து திமுக அமைச்சர்களும் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு கிளம்புகிறார்கள். இந்த சூழலில் வாக்கு பதிவிற்கு இன்னும் இரண்டு தினங்கள் இருப்பதால் மக்கள் மனதில் என்ன மாற்றம் நிகழுமோ, ஒருமாத கட்சியினர் உழைப்பு, கொடுத்த பொருள்கள், இறைத்த பணம் அனைத்தும் வீணாகிவிடுமோ என்ற பயம் திமுகவை தொற்றிக்கொண்டுள்ளது.


இதன் காரணமாகத்தான் இன்றைய ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் என்ற ஆயுதத்தை வேறு வழியின்றி கையில் எடுத்துள்ளார்.  

Similar News