'அதான் ஜெயிச்சாச்சுல்ல அப்புறம் என்ன குடும்பத்தலைவிக்கு மாசம் 1000 ரூபாய்?' - திமுக அரசின் 'பிம்பிளிக்கு பிளாப்பி'
ஜெயிச்சாச்சு இல்ல அப்புறம் என்ன மாசம் ஆயிரம் ரூபாய் என குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் விவகாரத்தில் திமுக அரசு பல்டி இருப்பதாக தெரிகிறது.
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தேர்தலில் திமுக கூட்டணி பெரும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றுள்ளது! குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், பட்டியில் அடைத்து வைத்து எதிர்க்கட்சிகளை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்தது என்பது போன்ற தேர்தல் விதிமுறைகளை மீறி தான் திமுக என்ற வெற்றியை பெற்றது என எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுகவின் 20 மாத கால ஆட்சிக்கு மக்கள் கொடுத்த பரிசு என இடைத்தேர்தல் வெற்றியை குறிப்பிட்டார்.
இந்த நிலையில் அரசியல் வல்லுனர்கள் இது குறித்து குறிப்பிடும் பொழுது, 'திமுக தேர்தல் முறைகேடு செய்து இந்த வெற்றியை பெற்றது ஆனாலும் இறுதியில் திமுகவிற்கு ஏற்பட்ட தோல்வி பயத்தின் காரணமாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி கொடுத்தது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது அப்டின்னு சொல்றாங்க. குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வாக்குறுதி குறித்து எதையாவது அறிவிப்பை வெளியிடுவோம் என தேர்தல் நடப்பதற்கு நான்கு நாளைக்கு முன்னர் அமைச்சர் உதயநிதி அங்கு சென்று, 'நீங்கள் எதிர்பார்ப்பது எங்களுக்கு புரிகிறது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் நீங்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் நீங்கள் எதிர்பார்ப்பது போல் மாதம் ஆயிரம் ரூபாய் பற்றி அறிவிப்பை தலைவர் விரைவில் வெளியிடுவார்' எனக் கூறினார்.
அமைச்சர் உதயநிதி இதனை கூறிய இரண்டு தினங்களில் முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய சென்றார். அப்பொழுது மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் அவர், 'மாத ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதற்கு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே முடிவு எடுக்கப்படும் அதற்காக நீங்கள் திமுக கூட்டணி வாக்குறுதியை நிறைவேற்றாது என நினைத்து விட வேண்டாம் என்கிற ரீதியில் எப்படியாவது ஓட்டு போடுங்கம்மா' என கூறிவிட்டு வந்தார்.