குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் உரிமைத்தொகை திட்டத்தை பல நிபந்தனைகளுடன் திமுக அரசு அமல்படுத்தவுள்ளதால் உரிமைத்தொகை அதிக மக்களுக்கு கிடைக்காது என்ற கருத்து மக்களிடையே அதிகரித்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 505 வாக்குறுதிகளை கொடுத்தது, அந்த 505 வாக்குறுதிகளில் முக்கிய வாக்குறுதியாக முப்பது வாக்குறுதிகளை திமுக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தது. அதில் குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை, பழைய ஓய்வூதிய திட்டம் அமல், நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் ஐந்து ரூபாய், மூன்று ரூபாய் விலை குறைப்பு, சிலிண்டர் மானியம் 100 ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது.
ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு எந்த திட்டங்களை முதன்மை வாக்குறுதிகளாக வைத்து திமுக மக்களிடத்தில் கூறி சிரித்து கையெடுத்து கும்பிட்டு ஓட்டு கேட்டதோ அதே திட்டங்களை நிறைவேற்றாமல் ஆளுநர் எதிர்ப்பு, மத்திய அரசு எதிர்ப்பு, திராவிட மாடல் என பல்வேறு வகைகளில் திமுக மக்களை மடை மாற்றி ஏமாற்றி வருகிறது என மக்கள் மத்தியில் கொதிப்பு எழுந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் நடந்த ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சரத்தின் போது மீண்டும் திமுகவிற்கு 'ஐயோ மக்களுக்கு வாக்குறுதிகளை கொடுத்தோமே!' என்ற நினைப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த காரணமாக தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்படும் என கூறினார். காரணம் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை திமுகவிற்கு கணிசமான அளவில் பெண்கள் வாக்களிக்க உதவியது, இதனால் மற்ற வாக்குறுதிகளை விட இந்த வாக்குறுதி தான் வரும் காலங்களில் திமுகவிற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என பார்க்கப்பட்டதால் இந்த குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் வாக்குறுதியை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என திமுக அரசு முயற்சித்தாலும் அரசு நிதிநிலைமே அதற்கு சரிவரவில்லை ஆனால் கொடுக்காமல் இருந்தால் வரும் காலங்களில் இதை எதிர்க்கட்சிகள் காரணமாக வைத்து பிரச்சாரம் செய்யும் என அரசியல் கணக்குகளை போட்டு திமுக அரசு குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிடலாம் என முடிவெடுத்துள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் திமுக அரசுக்கு ஒரு கெட்ட பெயர் ஏற்பட்டால் நம்மால் மீண்டு வரவே முடியாது என உன்ன திமுக தரப்பு அரசியல் ரீதியாக கணித்து ஒரு சிலருக்கு கொடுத்து விட்டால் பிறகு சமாளித்துக் கொள்ளலாம் என்கின்ற நினைப்பில் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை யார் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்கின்ற வகையில் ஒரு உத்தேச நிபந்தனைகளுடன் கூடிய தகவலை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட இரண்டு கோடி ரேஷன் அட்டைகள் இருக்கின்றன இந்த இரண்டு கோடி ரேஷன் அட்டைகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்றால் மிகப்பெரிய அளவில் தொகை செலவாகும் ஆனால் கொடுக்காமல் இருக்க முடியாது எனவே இதனை மக்களை சமாளித்தாக வேண்டும் என திட்டமிட்ட திமுக அரசு பல நிபந்தனைகளை விதித்துள்ளது. குறிப்பாக வருமான வரி செலுத்தக்கூடியவர்கள் பட்டியலை மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் தகவல் கேட்டுள்ளது, மாத வருமானம் இல்லாதவர்கள், அன்றாடம் கூலி வேலை செய்யும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், பி.ஹெச்.எச் அட்டை வைத்திருப்பவர்கள், அந்தியோதயா அன்ன யோஜனா வைத்திருப்பவர்கள், வாரிசு இல்லாதவர்கள், குடும்பத்தில் வேறு யாருமே இல்லாமல் ஆதரவு இன்றி விடப்பட்ட பெண்கள் போன்றோர்களுக்கு கிடைக்கும்.
யாருக்கு கிடைக்காது என்றால் முதியோர் ஓய்வு திட்டத்தில் சேர்ந்தவர்கள், குடும்பத்தில் வாரிசு அல்லது கணவன் சம்பாதித்தாலோ உரிமைத்தொகை கிடைக்காது, சொத்து இருந்தால் கிடையாது, அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்களுக்கு கிடைக்காது. இப்படி ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு பல நிபந்தனைகளை தற்போது விதித்துள்ளது திமுக அரசு, இதன்படி இந்த நிபந்தனைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு பார்த்தால் தமிழகத்தில் உள்ள இரண்டு கோடி ரேஷன் அட்டைகளில் ஏதாவது ஒரு வகையில் குடும்பத் தலைவிகள் வந்து விடுவார்கள் ஒன்று கணவன் வருமான வரி செலுத்துவார், அல்லது மகன் சம்பாதித்துக் கொண்டிருப்பார், அல்லது வீட்டில் இரண்டு சிலிண்டர் வைத்திருப்பார், அல்லது குடும்பத்தில் யாரேனும் இருப்பார்கள் வருமானம் ஈட்டுவார் இப்படி பல நிபந்தனைகளை விதித்த காரணத்தினால் இதில் தேர்வாகும் குடும்பத் தலைவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைய வாய்ப்பு இருக்கிறது.
அப்படி குறையும் போது அவர்களுக்கு ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு பின்னர் திமுக தரப்பில் நாங்கள் ஆயிரம் ரூபாய் கொடுக்க தயாராக இருக்கிறோம் ஆனால் வாங்கிக் கொள்ள உங்களுக்கு தகுதி இல்லை என தமிழக குடும்பத்தலைவிகளை சமாதானப்படுத்த திமுக அரசு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. எனவே குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை பின்னணியில் இப்படி ஒரு திமுகவின் சதித்திட்டம் இருப்பது தற்பொழுது தெரியவந்துள்ளதால் தமிழ்நாட்டில் இப்படி பார்த்தால் பத்தாயிரம் பேருக்கு மேல் உங்களால் கொடுக்க முடியாது என்கின்ற ரீதியில் குடும்ப தலைவிகள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்ற பெயரில் திமுக அரசு செய்யும் இந்த அரசியல் விளையாட்டு கண்டிப்பாக வரும் காலங்களில் திமுக அரசுக்கு பின்னடைவையும் சச்சரவையும் ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.