அடுத்த 12 மாசமும் இப்படித்தான் - கமலாலயத்தில் அடித்து சொன்ன அண்ணாமலை!

Update: 2023-05-16 11:04 GMT

தாமரை 2024 - தென் தமிழகத்தை குறிவைத்து இயங்கும் பாஜக மேலிடம்

சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்து

காங்கிரஸ் கர்நாடகா ஆட்சியை கைப்பற்றியது. இதற்காக திராவிட மண்ணிலிருந்து

பாஜக அகற்றப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதனை அடுத்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற

மாநிலங்களால், தென்னிந்தியாவின் ஐந்து முக்கிய மாநிலங்களில் பாஜகவின்

ஆட்சி இல்லாத நிலை தற்போது இருந்து வருகிறது. இன்னும் ஒரு வருட காலத்தில்

2024 ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் பாஜக

தென்னிந்தியாவில் குறிவைத்து தற்போது இறங்கியுள்ளது.

அதாவது 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றியை பெற

வேண்டும் என்பதற்காக பல ஆயுதங்களை புதுடெல்லி தலைமையகம் துவங்கி விட்டதாக

கூறப்படுகிறது. மேலும் தென் மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளா,

தெலுங்கானா மற்றும் கர்நாடகா மீது அதிக கவனத்தை செலுத்த வேண்டும் என்று

பாஜகவின் தேசிய தலைவர் ஜே பி நட்டா உத்தரவிட்டுள்ளதாகவும் அதற்கான பணிகளை

ஒவ்வொரு மாநில பாஜகவும் துவங்கி இருக்கிறதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 2024 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற

இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கான பல நடவடிக்கைகளை

அவர் மேற்கொண்டுள்ளார் குறிப்பாக இரண்டு மூன்று மாவட்டங்களை ஒரு

மண்டலங்களாக பிரித்து அந்த மண்டலங்களின் பொறுப்பாளராக மக்கள் அனைவராலும்

அடையாளம் காணக் கூடிய வகையில் இருக்கும் நபர்களை தேர்ந்தெடுக்கும்

பணியில் தற்போது இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா பிரதமர் மோடி இதுவரையில்

பேசியிருக்கும் பொதுக்கூட்ட வீடியோக்கள் அனைத்தையும் மற்ற மொழிகளில்

மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று பிரச்சார குழுவிற்கு கட்டளை

இட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதுவரை மேற்கொண்ட

பிரச்சார வீடியோக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளதால்

அதனை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் மொழிபெயர்த்து

மூன்று நிமிட வீடியோக்களாக தயாரித்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிடவும்

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம்

சமூக வலைதள பிரச்சாரம் என்ற புதிய யுத்தியை பா ஜ க கையில் எடுத்துள்ளது.

இந்த பணிகளுக்காக பாஜக தலைமையின் அலுவலகத்தில் ஐந்து பேர் கொண்ட குழு

நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிரத்தியேகமாக தமிழ் மொழியில்

மொழிபெயர்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதோடு தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் உள்ள

அனைத்து எலக்சன் பூத்துகளுக்கு முகவர்கள் நியமிக்க வேண்டும்

அதுமட்டுமல்லாமல் அனைத்து மாநில தலைவர்களும் தேர்தல் களப்பணிகளை

இப்பொழுதே துவங்க வேண்டும் யார் யார் எந்தெந்த தொகுதிகளில்

போட்டியிடுகிறார்கள் என அந்தந்த தொகுதிகளின் வேட்பாளர்களை இப்போதே தேர்வு

செய்து அதற்கான கள வேலைகளை தீவிரமாக ஆற்ற வேண்டும் மேலும் சமூக

வலைதளங்களில் பாஜக செய்த திட்டங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என பல்வேறு

அறிவுரைகளை ஜே பி நட்டா கொடுத்துள்ளதாக தெரிகிறது, இது மட்டுமல்லாமல்

இன்னும் 12 மாத காலத்தில் பிரதமர் மோடி தென்னிந்தியாவிற்கு குறைந்தது ஏழு

முறையாவது வருகை புரிவார் எனவும் தகவல்கள் பெறப்படுகின்றன.

இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் அடுத்த 12 மாத காலமும் தேர்தல் வேலை

போன்றே செய்யவேண்டும் என அண்ணாமலை கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுக்கு

உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் அடுத்த வாரத்தில் இது தொடர்பாக

மாநில பாஜக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக

தெரிகிறது.

Similar News