இந்தியர்கள் கிருஸ்தவர்களாக மதம் மாறினால் அது விபச்சாரமா?

Update: 2021-11-02 00:30 GMT
இந்தியர்கள் கிருஸ்தவர்களாக மதம் மாறினால் அது விபச்சாரமா?

தனக்குச் சம்மந்தமில்லாத வேறு ஜாதியின் கடவுளை வணங்கினால் அது விபச்சாரம் என்று பைபிள் அறிவிக்கிறது.

ஒவ்வொறு ஜாதிக்கும் என்று தனித் தனி கடவுள் இருப்பதையும் பைபிள் அறிவிக்கிறது.

ஆதாரம் :

2 ராஜாக்கள் – அரசர்கள் (1 : 3), (17 : 30 – 31), (19 : 37)

1 சாமுவேல் (5 : 1 – 2)

நீதிபதிகள் 11 : 23, 24

1 கொரிந்தியர் 8 : 5

கிமு 1975ம் வாக்கில் யாக்கோபு என்பவர் மெசபடோமியாவில் வாழ்ந்துவந்தார். அவரது இன்னொறு பெயர் இஸ்ரவேல். எனவே அவருடைய சந்ததிகள் இஸ்ரேலியர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

இஸ்ரவேலினுடைய தாத்தா ஆபிரஹாம். ஒரு நாள் அவர் முன்பு ஒரு கடவுள் தோன்றினார். அந்தக் கடவுள் 'பிற்காலத்தில் தான் ஆபிரஹாமின் சந்ததிகளுக்கு மட்டுமே பணியாற்றுவேன்' என்று உடன்படிக்கை செய்துக்கொண்டார்.

ஆதாரம் : ஆதியாகமம் – தொடக்கநூல் (17 : 3 -11)

கி.மு. 1500ல் மோசேவின் காலம் வரை இஸ்ரேலியர்கள் ஜாதிகளாக பிரித்து வைக்கப்பட்டிருக்கவில்லை. எனவே அப்போது ஒரு கடவுளை பெரும் தகுதியை அவர்கள் பெற்றிருக்கவில்லை. இதனால் இஸ்ரேலியர்கள் பல்வேறு உருவங்களையும், வேறு ஜாதி கடவுள்களையும் வழிப்பட்டனர்.

ஆதாரம் : ஆதியாகமம் ( 31 : 30 ), (35 : 4 ), யோசுவா ( 24 : 2, 23, 24)

மோசே இஸ்ரேலியர்கள் எனப்பட்ட யாக்கோப்பின் 12 மகன்களின் சந்ததிகளை 12 ஜாதிகளாக வகைப்படுத்தினார். இதன்மூலம் ஒரு கடவுளை பெற்றுக்கொள்கிற தகுதியை இஸ்ரேலியர்கள் பெற்றனர்.

இவர்கள் இஸ்ரேலியர்கள் அல்லாதவர்களை அதாவது இந்தியர்கள் போன்ற வெளிநாட்டவர்களை புறஜாதிகள், அந்நியர்கள், வேற்றினத்தார், பிறவினத்தார், gentiles, foreigners என்று பைபிள் அழைக்கிறது.

இந்நிலையில் ஆபிரஹாமின் கடவுள் மோசேவை சந்தித்தார். தான் இஸ்ரவேல் ஜாதியினரின் கடவுளாக பணியாற்ற விரும்புவதாக அறிவித்தார். (யாத்ராகமம் – விடுதலைப் பயணம் 3 : 7 -8)

அவரிடம் நான் இஸ்ரவேல் ஜாதியினருக்கு மட்டுமே கடவுளாக பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார். (யாத்ராகமம் விடுதலைப் பயணம் 29 : 45 -46 மற்றும் ஓசியா 41 : 17 மற்றும் எரோமியா 10 : 16

இந்தியர்களைப் போன்ற வெளிநாட்டினரை அழிக்க அந்த பைபிளின் கடவுள் உத்தரவிட்டார். (உபாகமம் – இணைச்சட்டம் : 7 : 1 -5)

ஆக, இந்துக்கள் கிருஸ்தவர்களாக மாறுவது விபச்சாரம் மட்டுமல்ல… அதை பைபிள் கடவுளே ஏற்பதும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும் பைபிள் கடவுளின் நோக்கமே இஸ்ரேலியர்கள் அல்லாத புறஜாதியினர், அதாவது இந்தியர்கள் கொல்லப்படவேண்டும் என்பதுதான்.   

குறிப்பு : இந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரையே சாரும். கதிர் செய்திகள் இந்த கருத்துக்களுக்கு பொறுப்பாகாது.


Similar News