சுதந்திர போராட்டத்திற்கும் ராமசாமிக்கும் என்ன சம்பந்தம்? தி.மு.க'வின் வரலாற்று திரிப்பு!
டெல்லியில் நிராகரிக்கப்பட்ட ஊர்தி எனக்கூறி அதில் ஈ.வே.ராமசாமியை சிலையை புகுத்தி தி.மு.க அரசு குடியரசு தின விழாவில் வாகன அணிவகுப்பு நடத்தியுள்ளது.
இன்று நாடு முழுவதும் 73'வது குடியரசு தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் மற்றும் கால அவகாசத்திற்குள் ஊர்தி பற்றி தகவல் அளித்தல் போன்ற காரணங்களால் ராணுவ பிரிவு தமிழகத்தின் ஊர்தியை அனுமதிக்கவில்லை. இந்நிலை இதனை உண்மையை மக்களுக்கு தெரிவிக்காமல் அரசியல் செய்து லாபம் பார்க்க நினைத்த தி.மு.க 'அய்யகோ பார்த்தீங்களா தமிழகத்தை புறக்கணிக்கிறார்கள்' என வழக்கமான முதலைக் கண்ணீர் வடித்தது. பின்னர் டெல்லியில் நிராகரிக்கப்பட்ட ஊர்தியை தமிழகத்தின் குடியரசு தினவிழா அணிவகுப்பில் இடம் பெற செய்கிறோம் எனவும் தி.மு.க அரசு அனுமதித்தது.
ஆனால் பாரதியார், வேலு நாச்சியார், வ.உ.சிதம்பரனார் என சுதந்திர போராட்ட வீரர்களை மட்டுமே டெல்லி அணிவகுப்பில் இடம் பெற திட்டமிட்ட தி.மு.க தமிழகத்தில் நிராகரித்த ஊர்தியை காட்சிப்படுத்துகிறோம் என்ற பெயரில் சுதந்திர போராட்டத்திற்கு சம்மந்தமே இல்லாத, வெள்ளையன் விடுதலை தந்துவிட்டு போய்விட்டால் இந்தியனால் ஒரு குண்டூசி கூட தயாரிக்க இயலாது என கூறி வந்த ஈ.வே.ராமசாமியை ஊர்த்தியில் புகுத்தி தன் வழக்கமான உண்மைக்கு புறம்பான அரசியலை முன்னெடுத்துள்ளது.
தி.மு.க'வின் வழக்கமான இந்த வரலாற்று திரிப்பு செயலால் வரும்கால சந்ததியினர் சுதந்திரத்திற்கு சம்மந்தமே இல்லாத ஈ.வே.ராமசாமியும் சுதந்தில போராட்டத்தில் ஈடுபட்டவர் என தவறாக பதியாதா? இப்படி தவறான வரலாற்றை திணிப்பதைத்தான் தி.மு.க அரசு விரும்புகிறதா?