ஒரு முறை கூட நெல்லையப்பர் கோவில் வாசலை மிதிக்காத ஸ்டாலினுக்கு "நெல்லை என்றால் ஏன் நெல்லையப்பர்" ஞாபகமாம்
இந்துக்களை பற்றி அவதூறு பேசியும், இந்து கடவுளை பழித்தும் வரலாறு கொண்ட தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் 'நெல்லை என்றால் முதலில் நினைவுக்கு வருவது நெல்லையப்பர் கோவில்' தான் என காணொலி காட்சி வாயிலாக நெல்லை பகுதி தி.மு.க நிர்வாகிகளிடம் பேசும்பொழுது கூறியுள்ளார்.
தி.மு.க'வின் தாய் கழகமான திராவிடர் கழகத்திற்கு ஒரு பழக்கம் உண்டு அது வளர்ந்ததும் இந்துக்களை பழித்துதான், தற்பொழுது வாழ்வதும் இந்துக்களை பழித்துதான். அப்படி இந்து கடவுள்களை மட்டும் உடைப்பது, இந்துக்களை அவதூறு பேசுவது, இந்து சமுதாயத்தின் ஒரு பிரிவினரான பிராமணர்களை மிகவும் இழிவாக பேசுவது, கடவுளை வணங்குபவன் முட்டாள், அயோக்கியன் என்றெல்லாம் ஊருக்கு ஊர் கல்வெட்டில் பதிந்து வைத்திருப்பது என இந்துக்களை கண்டாலே வெறுத்து வந்த திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்த தி.மு.க இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.
இப்படி கடவுளை மறுத்துப் பேசிய திராவிடர் கழகத்தின் வழிவந்த தி.மு.க'வும் கடவுள் மறுப்பு விஷயத்தில் திராவிடர் கழகத்திற்கு சளைத்ததல்ல, இந்து கடவுள்களை மட்டும் ஏளனம் செய்வது இந்துக்கள் பண்டிகைகளுக்கு மதிப்பு கொடுக்காதது என தி.மு.க'வும் இந்து விரோதியே. இந்த நிலையில் தற்பொழுது பா.ஜ.க'வின் துடிப்பான அரசியலால் இந்துக்கள் வாக்கு வங்கி என தனியாக தமிழகத்தில் உருவாகத் தொடங்கி விட்டது. இப்படிப்பட்ட வாக்கு வங்கியை பார்த்து தற்பொழுது தி.மு.க பயந்து வருகிறது அதன் வெளிப்பாடே கடந்த 10 மாத கால ஆட்சியில் தி.மு.க அமைச்சரவையில் அறநிலையத்துறை மட்டும் பறந்து பறந்து வேலை செய்ய காரணம்.
இப்படிப்பட்ட நிலையில்தான் இதுவரை கோவிலுக்கு போகாத முதல்வர் ஸ்டாலின் நேற்றைய திருநெல்வேலி பகுதி தி.மு.க நிர்வாகிகளிடம் உள்ளாட்சித் தேர்தல் குறித்து காணொளி வாயிலாக கலந்துரையாடும் போது, "நெல்லை என்றால் முதலில் நினைவுக்கு வருவது நெல்லையப்பர் கோவில் தான்" என பேசியுள்ளார் ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் ஒருமுறைகூட ஸ்டாலின் நெல்லையப்பர் கோவில் வாசல் படியை கூட மிதித்தது கிடையாது. வரலாற்றில் நெல்லையப்பரையும் அவரது துணை காந்திமதி அம்மையையும் வணங்கியதும் இல்லை அப்படி இருக்கையில் தேர்தல் வருகிறது இந்துக்களின் வாக்கு முக்கியமே என கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.
ஒருமுறை மூத்த பத்திரிகையாளர், துக்ளக் ஆசிரியர் அமரர் சோ கூறியது நினைவிற்கு வருகிறது, 'இந்துக்கள் வாக்கு வங்கி என ஒன்று உருவானால் தி.மு.க காவடி தூக்க தயார் ஆகி விடும்' என்பது போன்ற அவரின் கருத்துக்களை தற்பொழுது நினைத்துக் கொள்ள முடிகிறது, ஆம் இன்னும் தி.மு.க காவடி மட்டும் தூக்க ஆரம்பிக்கவில்லை.