"இந்திய தேசிய கொடிக்கு உக்ரைனில் மரியாதை" - நாடு திரும்பிய திமுக கவுன்சிலர் மகன் சையத் பெருமிதம்! மூக்குடைப்படும் பொய் பிரச்சாரம்!
"போர் நிலவும் உக்ரைனில் இருந்து பத்திரமாக நாடு திரும்பியதற்கு இந்திய நாட்டின் கொடியும், இந்தியன் என்ற அடையாளமும் தான் காரணம்" என்று நாடு திரும்பிய தமிழக மாணவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் இடையே பயங்கர போர் நிலவி வருகிறது. இதனால் உக்ரைனில் அமைதி சீர்குலைந்து, அந்நாட்டு மக்கள் வாழ்வாதாரத்தையும் நிம்மதியும் இழந்து தவித்து வருகின்றனர். அந்நாட்டு மக்கள் மட்டும் இல்லாமல், உக்ரைனில் கல்வி பயிலும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களும் இந்த போரில் தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து தவித்து வருகின்றனர்.
சீனா தற்போது தான் தன் நாட்டு மாணவர்களை உக்ரைனிலிருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால் இந்தியாவை ஆட்சி புரியும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, உக்ரைனில் போர் பதற்றம் தொடங்கியது முதலே நம்நாட்டு மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியது.
அந்த நடவடிக்கைக்கு இந்தியாவின் புனித நதியான கங்கை நதியின் பெயர் சூட்டி ஆபரேஷன் கங்கா என்ற ஒரு மகத்தான நடவடிக்கையை தொடங்கி, உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக தன் தாய்நாடு மாணவர்களை இந்திய நாட்டிற்கு மீட்டு அழைத்து வரத் தொடங்கியது.
இதன் விளைவாக இந்திய நாட்டிற்கு தற்போது பெரும்பாலான மாணவர்கள் பத்திரமாக நாடுதிரும்பியுள்ளனர்.
மாணவர்களை மீட்கும் நடவடிக்கை மூலம், தமிழக மக்களிடம் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க அரசு நற்பெயரை பெற்று விடுமோ? என்ற அச்சத்தில் தமிழகத்தில் தி.மு.க அரசு அதை மறைக்கும் விதமாக பல பொய் பிரச்சாரங்களை செய்து வருகிறது. உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்களை ஏதோ தி.மு.க அரசின் முழு முயற்சியால் மீட்டு விட்டது போல, பொய் காட்சிகளை தங்களின் செய்தி ஊடகங்கள் மூலம் தமிழக மக்களிடம் காட்டிவருகிறது.