'கந்த சஷ்டி கவசம்' பாடலை இழிவுபடுத்தியதை தொடர்ந்து, இப்போது 'சிதம்பரம் நடராஜர் கோயில்' ஸ்தல வரலாற்றை இழிவுபடுத்திப் பேசிய யூடியூபர்!

Update: 2022-04-27 11:48 GMT

தில்லை நடராஜப் பெருமானின் ஸ்தல வரலாற்றை,  ஆபாசமாக திரித்து வீடியோ வெளியிட்ட "யூடூ பூரூட்டஸ்" என்ற யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்குமாறு சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்து வருகிறது.


கடந்த 2020'ஆம் ஆண்டு, திராவிட சித்தாந்தம் கொண்ட "கருப்பர் கூட்டம்" என்ற யூடியூப் சேனல், இந்து மதப் புராணங்களைப் பற்றி கேலியாகவும், ஆபாசமாகவும் வீடியோ வெளியிட்டு வந்தது.


அதன் உச்சபட்சமாக, முருகப் பெருமானின் அருள்வேண்டி பாடப்படும் 'கந்த சஷ்டி கவசம்' பாடல் வரிகளை மிகவும் கொச்சைப்படுத்தி ஆபாசமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டது. இதனையடுத்து அந்த விவகாரம் தமிழக அரசியல் மட்டுமல்லாமல் தமிழக மக்களிடையே பூதாகரமாக வெடித்தது. இதனால் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் முழுமையாக முடக்கப்பட்டது. அதில் பணியாற்றியவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளும் பாய்ந்தது.


இதன் விளைவாக , இந்து மத நம்பிக்கை கொண்டவர்கள் வீதியில் இறங்கி கந்தசஷ்டி கவசம் பாடலை பாடினர். மக்களின் மனநிலைக்கு ஏற்ப அரசியல் தலைவர்களின் கொள்கைகளும் மாறத் தொடங்கிற்று,அதன்படி 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் கையில் 'வேல்' ஏந்தியே விட்டார்.


இந்நிலையில், நேற்று திராவிட மற்றும் இடதுசாரி சிந்தனைகள் கொண்ட 'யூ டூ புரூட்டஸ்' என்ற யூடியூப் சேனல் வாயிலாக, சிதம்பரம் நடராஜர் பெருமான்  குறித்து தவறாகவும், இழிவுபடுத்தியும், ஆபாசமாகவும் வீடியோ வெளியிட்டார் அச் சேனலின் நிர்வாகி 'மைனர் விஜய்' என்பவர்.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரத் தொடங்கிற்று. சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், இந்துமத உணர்வார்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் "'யூடூ   புரூட்டஸ்' யூடியூப் சேனல் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.


இதுகுறித்து, அகில உலக ஆன்மிக இந்து மத கட்சியின் தலைவர் ஜே.எஸ்.கே கோபி அவர்கள் "U2 BRUTUS இவன் நம்ம சிவ பெருமானை எவ்ளோ இழிவுபடுத்தி பேசியிருக்கான்.அவன் பேசுன வீடியோ பாத்ததும் எனக்கு இதான் தோணுச்சு. தமிழகத்தில் இந்துக்கள் அரசியல் அனாதைகளாக இருக்கோம்.... 


பல கோடி இந்து மக்கள் வணங்கும் சிவ பெருமானை இழிவு படுத்தி பேசிய மைனர் விஜய் என்ற நபர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன்...தமிழக அரசின் இந்துசமய அறநிலைய துறையின் சிறப்பு குழு கவனத்திற்கு இதை கொண்டு சென்றுள்ளேன்!" என்று தன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

JSK Gopi Tweet


தேர்தல் நேரத்தில் இந்துக்களின் ஓட்டுக்களை பெற  "எங்கள் கட்சியில் பெரும்பாலானோர் இந்துக்கள் தான்" என்று கூறி, இப்பொழுது அரியணையில் அமர்ந்திருக்கும் தி.மு.க அரசு, இந்து மதத்தை இழிவுபடுத்தும் பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வரும்  'யூடூ புரூட்டஸ்' போன்ற யூடியூப் சேனல்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கும?? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Similar News