சத்குருவை அவமதிக்கும் நோக்கில் புனையப்பட்ட நேர்காணல் - பிரிவினைவாதிகள் சதியா? ஈஷா'வை வீழ்த்தும் நோக்கமா?
'மண் காப்போம்' இயக்கம் குறித்தும், மண்வளத்தை பாதுகாப்பது குறித்தும் சத்குரு சில செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்தார், அதன் தொடர்ச்சியாக தமிழ் பி.பி.சி செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த போது, அப்பேட்டியின் நெறியாளர் சத்குருவிடம், "ஈஷா அறக்கட்டளை சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்று குற்றச்சாட்டு எழுகிறது" என்று கூறினார். அதற்கு சத்குரு அவர்களின் பதிலடி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இயற்கை அன்னை அருளிய மண்வளத்தை, இந்த உலகம் பேணிக் காக்க வேண்டும் என்ற நோக்கில், 'மண் காப்போம்' என்ற மாபெரும் இயக்கம் மூலமாக சத்குரு அவர்கள் உலகிற்கு எடுத்துரைத்து வருகிறார். ஐரோப்பாவில் தொடங்கிய சத்குருவின் இரு சக்கர வாகன பயணத்தால் 74 நாடுகள் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு ஆதரவு தர முன்வந்துள்ளனர். இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சத்குருவும், அவர் ஏந்திச் சென்ற "மன் காப்போம்" இயக்கத்தின் நோக்கமும் உலக அளவில் பேசுபொருளானது. இந்நிலையில் மே 29 அன்று பாரத தேசம் திரும்பினார் சத்குரு
இந்தியா திரும்பிய சத்குருவிற்கு குஜராத், ராஜஸ்தான், உத்திரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் "மண் காப்போம் இயக்கத்திற்கு தங்களின் முழு ஆதரவைத் தருகிறோம்" என்று உறுதி அளித்துள்ளனர்.
இப்படி மக்கள் மற்றும் அரசாங்கங்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் "மண் காப்போம்" இயக்கத்திற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், தமிழகத்திலுள்ள சில தரப்பினர் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தங்கள் வேலைகளை தொடங்கிவிட்டனர்.
'மண் காப்போம்' இயக்கம் குறித்து பல செய்தி ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்து வருகிறார் சத்குரு, தமிழக ஊடகங்களில் ஒன்றான பி.பி.சி தமிழ் செய்தி நிறுவனத்திற்கும் பேட்டி அளித்தார்.
அப் பேட்டியின்போது, "சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை காட்டும் ஈஷா அறக்கட்டளை சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது" என்று அச்சத்துடன் சத்குருவிடம் இக்கேள்வியை முன்வைத்தார் பி.பி.சி தமிழ் நெறியாளர் .