ஒப்பந்தத்தின் மதிப்பும்; இதனால் பல நாடுகளுக்கு ஏற்படும் இழப்பும்.
2015ஆம் ஆண்டில் இருவர் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் மதிப்பு ரூபாய்.7,525 கோடி ஆகும். கேரள அரசு அதானி நிறுவனத்திற்கு இத்துறைமுகம் கட்ட மட்டும் அனுமதி வழங்காமல் இதனை நாற்பது ஆண்டுகள் இந்நிறுவனம்
பாரம்பரிக்கவும், இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இத்துறைமுகம் சர்வதேச கிழக்கு-மேற்கு கப்பல் போக்குவரத்து பாதைக்கு அருகில் அமைக்கப்படவுள்ளது.
மேலும் இத்துறைமுகத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் 18,000 TEU கண்டெயனர்கள் கொண்டு வரும் கப்பல்களை கையாளமுடியும். இதற்கு பெட்டியாக உள்ள துறைமுகம் என்றால் அது இலங்கையிலுள்ள கொழும்பு துறைமுகம்தான், அதில் இவ்வளவு பெரிய கப்பல்களை கையாளமுடியாது. இதனால் விழிஞ்சம் துறைமுகத்திற்கு கூடுதல் பலமாகும். இதனால் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பெரும் இழப்பாகும் ஏனென்றால் இதுவரை ஆண்டிற்கு இந்தியாவிற்கு வரும் கண்டெய்னர்களில் 30 லட்சம் கண்டெயனர்கள் கொழம்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்களிலுள்ள துறைமுகங்களுக்கு செல்கிறது இதில் 85% கொழும்புவிற்கு செல்கிறது. மேலும் இத்துறைமுக்கதால் நம் நாட்டிற்கு வரும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி
பொருட்களை அதிகளவில் கண்டெய்னர்களை கொண்டுச்செல்லும் கப்பல்களை நாம் நேரடியாக கையாளலாம். இதன்மூலம் ஒரு TEU கண்டெய்னருக்கு ஆகும் செலவான 80-100 அமெரிக்க டாலர் மிச்சமாகும் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. நாட்டிற்கு இதனால் வருவாய் பெருகுவது மட்டுமல்லாமல், அம்மாநிலத்தை தொடர்ந்து அண்டை மாநிலமான தமிழகம் மற்றும் கர்நாடகவிலும் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உண்டாகும்.
கையெழுத்திட்ட நாளிலிருந்து, இன்றுவரை நிலவும் பிரச்சனையும்; இந்து அமைப்புகள் தரும் ஆதரவும்.
2015 ஆம் ஆண்டு கையெழுத்திட்ட நாளிலிருந்து அங்கு பல பிரச்சனைகள் இதற்கு வந்த வண்ணமாக உள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக இப்பிரச்னை பூதாகரமாக வெடித்தது.
இதனை அங்குள்ள ஆளும்கட்சி அன்றிலிருந்து இது கத்தோலிக்க சர்ச்குள் மீனவர்களை தூண்டிவிடுகிறார்கள் என்கின்றனர். ஆனால், மறுபக்கம் இத்துறைமுகத்தை உரிய காலத்தில் முடிக்க வேண்டும் என அங்குள்ள இந்து அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இதற்கு எதிராக போராட்டம் அங்குள்ள கத்தோலிக்க சர்ச் தலைமையில் தீவிரமாகின. இதனால் காரணமாக அதானி நிறுவனம் ஆகஸ்ட் 16 தேதியிலிருந்து கட்டுமானப்பணிகளை நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து அதானி நிறுவனம் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து அதில் மாநில அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றது. இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று, துறைமுகம் கட்டும் பணிகளை நிறுத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.
26ஆம் தேதி மீண்டும் சூடுபிடித்த போராட்டம்
உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதிலும், 100 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடந்துவந்தன. நீதிமன்றத்தில் கத்தோலிக்க சர்ச் தலைமையிலான போராட்டக்கார்கள் குழுவினர் நவம்பர் 22ஆம் தேதி, துறைமுகத்திற்கு வரும் வாகனங்களை மறிக்க மாட்டோம் என உறுதியளித்தது. அதனை மீறி நவம்பர் 26ஆம் தேதி, துறைமுகத்திற்கு கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரிகளை கத்தோலிக்க சர்ச் தலைமையில் போராடும் போராட்டக்கார்கள் வாகனங்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். மேலும் அங்குள்ள இந்து அமைப்புகள் துறைமுகத்திற்கு ஆதரவாக, கத்தோலிக்க போராட்டக்கார்களுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
காவல்நிலையத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள்
நவம்பர் 26ஆம் தேதி நடத்திய போராட்டத்தில் போலீசார் 5 நபர்களை கைது செய்தனர். இவர்களை விடுவிக்க நவம்பர் 27ஆம் தேதி சர்ச் தலைமையிலான போராட்டக்காரர்கள் விழிஞ்சம் காவல் நிலையத்தை தாக்கினர். அதன் பிறகு திருவனந்தபுரம் மாநகர காவல் ஆணையர் முதலாக, 36 காவலர்கள் காயமடைந்தனர் என்றும் ரூபாய் 85 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதைமடைந்துள்ள என அவர் தெரிவித்தார். மேலும் இப்போராட்டத்தில் சம்பந்தப்பட்டதாக 3,000 பேர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் மாநில அரசு; என்ஐஏ விசாரணை
கேரள நீதிமன்றத்தில் அம்மாநில அரசு சமர்ப்பித்த வாக்குமூலத்தில்
இப்போராட்டம் பாதிரியார்கள் தலைமையில் நடந்தது என்று தெரிவித்தது. மேலும் அவர்கள் அன்று சர்ச்சில் மணி ஓசை எழுப்பி மக்கள் திரட்டி இதனை செய்தனர் என்றும், இதற்கு தலைமை வகித்தவர் பாதிரியார் எகேனே பெரைரா என்பவர் என்றும், அதுமட்டுமல்லாமல் 64 போலீசார் காயமடைந்தனர் என்றும் அரசு தெரிவித்தது. மேலும் துறைமுத்திற்கான பாதுகாப்பை மத்தியப் படைகளிடம் ஒப்படைக்க தயார் என அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இதுமட்டுமல்லாமல் இதனை விசாரிக்க என்ஐஏ அமைப்பு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கியிருக்கிறது. இதன்மூலம் அந்நிய நாட்டின் கைகள் இதன் பின் இருக்கிறதா என்பது தெரியவரும்.
தமிழகத்தில் நடந்தது தான் இப்போது கேரளாவில் நடக்கிறதா?
தமிழகத்தில் எப்படி பாதிரியார்கள் அண்டை நாடான சீனா பலனடைவதற்காக மக்களை மூளைச்சலவை செய்து தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட்டிற்கும், கூடங்குள அனுமின் நிலையத்திற்கு எதிராக போராட வைத்தார்களோ, இப்போது கேரளாவிலும் அப்படி செய்யத் தொடங்கிவிட்டது போல் இச்சம்பவம் தெரிகிறது என பலர் பேசி வருகிறார்கள்.