கெடு விதித்த அண்ணாமலை - தொடாமல் ஒதுங்கிய தி.மு.க அரசு, பயமா?

Update: 2023-03-07 06:06 GMT

ஒரு நாள் டைம் தருகிறேன் முடிந்தால் என் மீது கை வையுங்கள் என திமுக அரசுக்கு அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுகிறார்கள் என பரவிய வதந்தியை தொடர்ந்து இந்த விவகாரத்தில் காவல்துறை சமரசம் செய்தது! மேலும் தற்பொழுது வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தருவதற்காக பிரத்யோக தொலைபேசி எண்களை அளித்துள்ளது. மேலும் வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்பிய ஐடிகளை முடக்கியும் காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது, இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் அரசியல் ரீதியாகவும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அரசியல் கட்சிகள் இதற்கு நீங்கள் தான் காரணம்! நீங்கள் தான் காரணம் என மாறி மாறி குற்றம் குற்றம் சுமத்தி கொள்ளும் நிலை வரை இந்த விவகாரம் வெடித்துள்ளது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தால் அந்த அறிக்கையில் திமுகவினருக்கு இதற்கு காரணம் என்கிற ரீதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தி இருந்தார். அதற்கு தகுந்தாற்போல் ஹிந்தி தெரியாது போடா, பானிபூரி என இதற்கு முன்னர் திமுகவினர் கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அண்ணாமலையின் அந்த அறிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் வட மாநில தொழிலாளர்களை அவமான படுத்தும் நோக்கில் பேசி வருவதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கலவரத்தை தூண்டுதல்,இரு பிரிவுகளிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்புதல்,குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக தவறான கருத்து தெரிவித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்.பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்! என அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.


இப்படி வட மாநில தொழிலாளர்கள் மீதான விவகாரத்தில் அண்ணாமலை அறிக்கை விடுத்ததை தொடர்ந்து அண்ணாமலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் அண்ணாமலை ஒருநாள் கால அவகாசம் கொடுத்திருப்பது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே திமுக மற்றும் பாஜக இடையே பனிப்போர் வெடித்துள்ள சூழலில் இந்த வட மாநில தொழிலாளர்கள் விவகாரம், அதனை தொடர்ந்து அறிக்கை, அதனை தொடர்ந்து வழக்கு என தமிழக அரசியல் தற்போது தகிக்கிறது.

ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு வழக்குகள் தொடுப்பட்டிருக்கிறது, அண்ணாமலை நடத்திய போராட்டம்! அண்ணாமலை விடுத்த அறிக்கை! என அண்ணாமலை தொடர்ந்து திமுக அரசு நிறைய வழக்கு போட்டுள்ளது. என்ன நிலையில் மேலும் ஒரு வழக்காக இந்த நாலு வழக்குகளையும் திமுக அரசு தற்போது தொடுத்துள்ளது. வழக்கு போடப்பட்டுள்ளதே தவிர இதற்கு காவல்துறை தரப்பிலிருந்து அரசு தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை மேலும் நாளைய தினத்திற்குள் இந்த விவகாரம் மேலும் பூதாகரமாக வெடிக்கும் எனவும் தெரிகிறது.

Similar News