நவம்பர் 15 பழங்குடியினர் பெருமை நாளாக கொண்டாட காரணமாக இருந்த பிர்சா முண்டா:யார் இவர்?
பிறப்பு
காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட ஜார்கண்ட் மாநிலத்தின் குந்தி மாவட்டத்தில் உள்ள உலிஹாட்டு கிராமம் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலிருந்து 66 கிமீ தொலைவில் உள்ளது இது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு பிரபலமான கிளர்ச்சியை வழிநடத்திய கவர்ச்சியான பழங்குடி ஹீரோ பிர்சா முண்டாவின் பிறப்பிடமாகும்.
இவர் நவம்பர் 15 1875 அன்று பிறந்தார் அவரது பிறந்தநாளே பழங்குடியினப் பெருமை தினமாகக் கொண்டாடப்படுகிறது மேலும் அவரது 150வது பிறந்தநாள் இந்த ஆண்டு பழங்குடிப் பெருமை ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது எதற்காக இவரது பிறந்த நாள் பழங்குடியினரின் பெருமை நாளாக கொண்டாட என்றால் பழங்குடியினரின் உரிமைகளுக்காக போராடிய முக்கியமான சுதந்திர போராட்ட வீரர் ஆவார்
பழங்குடியினரின் தலைவரான பிர்சா முண்டா
1899 இல் ஜார்கண்டின் பழங்குடியினரிடையே பெரும் கலகம் வெடித்தது இதற்காக ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் தங்கள் தாய்மொழியில் வெளியாட்களின் ஆட்சி முடிந்துவிட்டது எங்கள் சொந்த ஆட்சி தொடங்கியது என்று அறிவித்தனர் இந்த இயக்கத்தால் அச்சுறுத்தப்பட்ட ஆங்கிலேயர்கள் மிருகத்தனமான அடக்குமுறையை நாடினர் இன்று சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டா என்று போற்றப்படுபவர் பழங்குடி மரபுகளில் பிரிட்டிஷ் ஆட்சியின் தாக்கத்தை அங்கீகரித்த ஒரு விதிவிலக்கான தலைவர்
ராஞ்சியில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் விவேக் ஆர்யன் கூறுகையில் பழங்குடியினரின் உரிமைகள் பறிக்கப்படுவதை பள்ளி மாணவராக இருந்தபோதே பிர்சா முண்டா உணர்ந்தார் அவரது செயல்பாடு 1890 இல் பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு வழிவகுத்தது இதனை அடுத்து பழங்குடியினரின் உரிமைக்காக போராட வேண்டும் என தீர்மானித்த பிர்சா முண்டா பழங்குடி சமூகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கினார் அவர்களின் உரிமைகளுக்காக அவர்களைத் திரட்டினார்