கார்கில் விஜய் திவாஸ்: 1947 பிரிவினை முதல் வெற்றி வரை...முழு வரலாறு!

1999 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் படைகள் திடீர் படையெடுப்பை கார்க்கில் கண்டது. கடற்படை மற்றும் விமானப்படையின் ஆதரவுடன் இந்திய ராணுவம் இதில் வெற்றி கண்டு வெற்றியின் உச்சகட்டத்தை ஜூலை 26 அன்று அறிவித்தது. அதன் காரணமாகவே இப்பொழுதும் ஜூலை 26 கார்கில் விஜய் திவாஸ் என நினைவு கூறப்பட்டு வருகிறது.

Update: 2024-07-27 09:10 GMT

பிரிவினை தொடக்கம்:

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு என்பது எப்பொழுதுமே சரிவர அமைந்ததில்லை. 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தான் இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பிரிவினை உருவானது. 1991 இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முதல் போர் மூண்டது. இந்தப் போரில் பாகிஸ்தான் ராணுவத்தின் 93 ஆயிரம் வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர், இதனை தொடர்ந்து இந்திய ராணுவம் இதில் வெற்றியைக் கண்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அதில் ஒன்று கிழக்கு பாகிஸ்தான் (பங்களாதேஷ்) , மற்றொன்று மேற்கு பாகிஸ்தான். 

லாகூர் ஒப்பந்தம்:

ஆனால் பாகிஸ்தான் இதில் அடைந்த தோல்வி பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜியா உல் ஹக்கை தூக்கம் இழக்க செய்ய இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு வழிவகுத்தது. அதனால் 70களில் தேச விரோத நடவடிக்கைகள் பாகிஸ்தானில் தொடங்கப்பட்டன. அந்த தேச விரோதம் நடவடிக்கைகளில் காலிஸ்தான் இயக்கமும் ஒன்று! மேலும் 90களில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அணுசக்தி திறனை பெற்றனர். அதே சமயம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தவும், அமைதியைப் பேணவும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், 11 பேர் கொண்ட தனது குழுவுடன், பிப்ரவரி 21, 1999 அன்று லாகூர் ஒப்பந்தத்தை சமர்ப்பித்தார். ஆனால் 1999 மார்ச் மாதத்தில் பாகிஸ்தான் ராணுவ ஜென்ரல் பர்வேஸ் முஷாரப் மற்றும் ஐ.எஸ்.ஐ தலைவர் இக்தார் அகமது பட் இருவரும் இணைந்து இந்த ஒப்பந்தத்தை நிராகரித்தனர். அதுமட்டுமின்றி இந்திய எல்லையில் உள்ள கார்கில் மாவட்டத்தில் ஊடுருவி ஆப்ரேஷன் பத்ரை தொடங்கினர்.

ஊடுருவிய பாகிஸ்தான்:

இதை தெரிந்து கொண்ட இந்திய ராணுவம் 1999 மே 15 அன்று ஊடுருவல்காரர்களை விசாரிப்பதற்காக கேப்டன் சவுரவ் கலியாவின் தலைமையில் ஐந்து பேர் கொண்ட படையை இந்திய ராணுவம் கார்கில் மாவட்டத்திற்கு அனுப்பியது. ஆனால் ஊடுருவிய எதிரிகள் திடீரென்று ரோந்து பணியில் ஈடுபட்ட குழுவை தாக்கியது, இதன் காரணமாக ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினர் அனைவருமே வீர மரணம் அடைந்தனர். மேலும் ஊடுருவல்காரர்கள் 1999 மே 19ஆம் தேதியில் கார்கில் மாவட்டத்தை தாக்கியதோடு இந்திய ராணுவத்தின் ஆயுதக் கிடங்கையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினர். இதனால் இந்திய ராணுவத்திற்கு ஒரே நாளில் 125 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் இந்திய ராணுவத்தில் 140 பகுதிகளை பாகிஸ்தான் ராணுவம் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து 2500 வீரர்களை நிறுத்தியது. இருப்பினும் பாகிஸ்தானில் இந்த அதிரடி தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் விஜயை தொடங்கியது. 

டைகர் ஹில்:

மே 20 அன்று, கார்கில் மாவட்டத்தின் திராஸ் செக்டருக்கு இந்திய ராணுவத்தின் கோர்க்கா ரெஜிமென்ட், ராஜ்புத் ரெஜிமென்ட் மற்றும் 18 கிரெனேடியர்கள் அனுப்பப்பட்டனர். ட்ராஸ் செக்டரில் உள்ள டோலோலின் பாயிண்ட், பாயின்ட் 4590, பாயின்ட் 5140, பாயின்ட் 5410 என்ற மலைகளில் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றிவிட்டு, கார்கிலின் பெருமை என்று அழைக்கப்படும் 18,000 அடி உயரத்தில் உள்ள டைகர் ஹில் சிகரத்தில் இந்திய இராணுவத்தினர் ஏறினர். 

கேப்டன் விக்ரம் பத்ரா வீரமரணம்:

மே 22 அன்று கேப்டன் விக்ரம் பத்ரா தலைமையில் இந்திய ராணுவம் மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டது, ஆனால் கேப்டன் விக்ரம் பத்ரா வீரமரணம் அடைந்தார். ஜூலை 3, 1999 அன்று மாலை 5:15 மணிக்கு, டைகர் ஹில் மீது இந்திய ராணுவத்தின் கடைசித் தாக்குதல் போஃபர்ஸ் துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவ வீரர்களால் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் பயந்து போன பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலத்தை விட்டு வெளியேறியது. 

இந்திய ராணுவம் வெற்றி:

அதுமட்டுமின்றி, இந்திய ராணுவ வீரர்கள் நிலத்தில் இந்த அதிரடி தாக்குதல்களை நடத்திய அதே சமயத்தில் இந்திய கடற்படையின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை தளபதிகள் மே 25 1999 அன்று தல்வார் நடவடிக்கையை துவக்கினார்கள். மேலும் இந்திய விமானப்படை மே 26 1999 அன்று ஆப்ரேஷன் சஃபேட் சாகரை தொடங்கியது. இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்தால் பதிலடி கொடுக்க முடியாமல் இந்திய நிலைகளை விட்டு வெளியேறியது. இதனை அடுத்து இந்திய ராணுவம் கார்கில் போரில் முழுமையாக வெற்றி பெற்றது, அதுவும் இந்த வெற்றி ஜூலை 26 அன்று கிடைத்தது. அதன் காரணமாகவே அன்றிலிருந்து இந்த நாள் கார்கில் விஜய் திவாஸ் என்று அழைக்கப்பட்டு வருகிறது. 

Source : Organiser 

Tags:    

Similar News