'குரூப் 2 தேர்வை கூட ஒழுங்கா நடத்தமாட்டீங்களா?' - திமுக அரசை கேள்வி கேட்கும் குரூப் 2 எழுதிய இளைஞர்கள்

Update: 2023-03-01 03:10 GMT

குரூப் 2 தேர்வில் நடந்த முறைகேடுகள் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது, குறிப்பாக வேலை தேடி எப்படியாவது போட்டி தேர்வில் வென்று ஜெயித்து விட வேண்டும் என்ற இளைஞர்களுக்கு திமுக அரசு மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

குரூப் 2 தேர்வு எனப்படுவது அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், இந்த தேர்வுகள் இளைஞர்களால் குறிப்பிட்ட வயது வரை விண்ணப்பம் செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய நாளில் தேர்வு நடத்தப்படும்! இதன் முடிவுகளை வைத்து அவர்கள் நேர்முகத் தேர்வுக்கு இதில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்து அவர்கள் நேர்முக தேர்வுக்கு சென்று அதன் தேர்ச்சி பெறுவதன் மூலம் அவர்கள் அரசு பணிகளில் அமர்த்தப்படுவார்கள்.

இப்படி இளைஞர்களின் அரசு பணிக்கான நடத்தப்படும் குரூப் 2 தேர்வு இந்த வருடம் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்த சின்னாபின்னமான காரணத்தினால் இளைஞர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த பிப்.25ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வின் பல தேர்வு மையங்களில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறி இருந்ததாகவும், தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்களில் பதிவு எண்கள் தவறாக இருந்தாகவும், பல இடங்களில் வினாத்தாள் வெளியானதால் குளறுபடி ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

சென்னை, கடலூர், சேலம், தஞ்சை மாவட்டங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததால், தேர்வு தொடங்க தாமதமானது.தொடர்ந்து தாமதம் ஏற்பட்ட தேர்வு மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதுபோன்ற முதன்மை தேர்வுகளில் தமிழ்நாடு அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த முறை, வினா/விடைத்தாள் புத்தகத்தில் இந்த எண் அச்சிடப்பட்டு இருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட வினா-விடைப் புத்தகம், குறிப்பிட்ட தேர்வருக்கு மட்டுமே செல்ல வேண்டும். ஆனால், இந்த ஏற்பாடுமுறையாக செய்யப்படாததால் வினாத்தாள் மாறிவிட்டது.

தவறை உணர்ந்த கண்காணிப்பாளர்கள், வினாத்தாளை தேர்வர்களிடம் இருந்து திரும்பப் பெற்று, சரியான தேர்வருக்குத் தந்தனர். இதனால் சில மையங்களில், தேர்வுமீண்டும் தொடங்க ஒரு மணி நேரத்துக்கும் மேலானது.

தவறை அறிந்து விடைத்தாள் புத்தகத்தை திரும்பப் பெறும் முன்னரே சிலர் விடைகளை எழுதத் தொடங்கிவிட்டனர். மறுமுறை இந்த விடைத்தாள் வேறு ஒருவருக்கு போனபோது, அவரால் விடையை திருத்த இயலாமல் போனது. இது எப்படி சரியாகும்? எப்படி ஏற்க முடியும்?

மாலைத் தேர்வுக்கான வினாத்தாள்/விடைத்தாள் உறை, தேர்வர்கள் முன்னிலையில் அல்லாமல், வேறு ஒரு அறையில் பிரிக்கப்பட்டு, தேர்வர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால், தேர்வர்கள் - கண்காணிப் பாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பல மையங்களில் தேர்வுஎழுதுவதற்கான 3 மணி நேரம் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் தேர்வர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இப்படி குரூப் 2 தேர்வில் நடைபெற்ற கோளாறின் காரணமாக தற்போது இளைஞர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளன, இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தற்போது ஆளும் திமுக அரசை குற்றம் சாட்டி வருகின்றனர், மேலும் குரூப் டு தேர்வு கூட ஒழுங்காக நடத்த திராணியற்ற அரசாக திமுக அரசு இருந்து வருகிறது என்று இளைஞர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.

Similar News