மக்கள் சேவையில் 20 ஆண்டுகள் அல்ல இன்னும் பல நூறாண்டுகள் காண வேண்டும்!
மோடி@20 புத்தகம் குறித்த சிறு பார்வை
நரேந்திர மோடியின் வருகை இந்திய அரசியலில் புதிய விடிவெள்ளி என்று சொல்லலாம். இனி வரும் தலைமுறையினர் இந்திய அரசியலை மோடியின் ஆட்சிக்கு முன், மோடியின் ஆட்சிக்கு பின் என இரண்டு காலங்களாக பிரிந்து பகுத்தாய முடியும். உலக அரசியல் களத்திலும், இந்திய அரசியலிலும் அவர் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
ஒரு மாநிலத்தின் அதிக நாள் முதல்வராக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்ற மோடி அவர்களுக்கு தேசிய அரசியலில் அதுவே புது அடையாளமாக அமைந்தது. கடந்த இருபது ஆண்டுகளில் மோடியின் சிந்தனை பில்லியன் கணக்கான மக்களை அவர்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் பூகோளம் இவற்றையெல்லாம் கடந்து ஊக்கப்படுத்தியுள்ளது.
அவர் இந்திய மக்களின் நாயகனாக மட்டும் திகழவில்லை. அவருடைய புகழை உலகம் போற்றியது, ஏராளமான புள்ளி விபரங்களின் அடிப்படையில் உலகின் புகழ் பெற்ற தலைவர்களில் முதன்மையானவராக மோடியே பல ஆண்டுகளாக ஜொலிக்கிறார். இதற்கான காரணம், அவர் ஒவ்வொரு முறை பதவிக்கு வருகிற போதும் தனக்கு அதிகாரம் கிடைத்து விட்டதாக நினைத்தவரல்ல. மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்ததாகவே எண்ணி செயல்பட்டார்.
இந்திய மக்களுக்கு சேவையாற்றுவதில் 20 ஆண்டினை நிறைவு செய்திருக்கும் மோடி அவர்களின் சேவைய போற்றும் வகையிலும், அவருட்டைய கருத்துருவாக்கத்திற்கு, சிந்தனைக்கு வடிவம் தரும் வகையில் வெளிவந்திருக்கும் புத்தகம் தான் மோடி@20. அரசியல், விளையாட்டு, பொருளாதாரம், கலை போன்ற பல்வேறு துறையில் இருப்பவர்ர்கள் மோடி அவர்களின் நற்பண்புகளை, மக்களுக்கு ஆற்றிய சேவையை, அவர் தலைமையை வெளியுலகுடன் பகிரும் விதமாக அவர்களுக்கு நேர்ந்த அனுபவங்களை இதில் எழுதியுள்ளனர்.
இந்திய பேட்மிண்டன் விளையாட்டின் ஜொலிக்கும் நட்சத்திரமான பி.வி சிந்து முதல் அத்தியாயத்தில் எதனால் இளைஞர்களின் எழுச்சி நாயகனாக மோடி விளங்குகிறார் என்பதை மிக அழகாக எழுதியுள்ளார். இந்திய மக்களிடம் எப்படி செய்ய முடியும் என்கிற மனப்பான்மையை மாற்றி எப்படி செய்யாமல் இருக்க முடியும் என்கிற மன்பான்மையை உருவாக்கியவர் மோடி என எழுதியுள்ளார். இதை மோடி அவர்களுடன் பழகிய பலராலும் உணர முடிந்திருக்கும். அவர் எப்போதும் பிரச்சனைகளை பிரச்சனையாக பார்த்ததில்லை நல்ல தீர்விற்கான வாய்ப்பாகவே பார்த்திருக்கிறார்.
இது போன்ற ஏராளமான சுவரஸ்ய பகிர்வுகளை தாண்டி வெளிவந்திருக்கிறது மோடி@20. அவர் மக்கள் சேவையில் இன்னும் ப்ல நூறு காண வேண்டும் என வாழ்த்துகிறது கதிர் நியூஸ்