ஆபரேஷன் அஜய் 2023: இஸ்ரேலில் உலக நாடுகளை பிரம்மிக்க வைத்த இந்தியாவின் மீட்பு பணி - ஓர் அலசல்!

Update: 2023-10-20 01:27 GMT

போர் காரணமாக இஸ்ரேலில் இருந்து இந்திய குடிமக்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்ய ஆபரேஷன் அஜய் 2023 மீட்பு பணியை இந்தியா தொடங்கியது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் இருக்கும் இந்திய மக்களை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு செல்ல சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்யப்பட்டது. விமானப்படைக்கு உதவ இந்திய கடற்படையும் தயாராக இருந்தது. இஸ்ரேலில் சுமார் 18,000 இந்தியர்கள் வசித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது . இப்பகுதியில் மோதல்கள் அதிகரித்துள்ள நேரத்தில் இந்திய மக்கள் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதை உறுதி செய்வதே ஆபரேஷன் அஜய் நடவடிக்கையின் குறிக்கோள்.

முதல் விமானம்

அக்டோபர் 13 , 2023 வெள்ளிக்கிழமை காலை ஆபரேஷன் அஜய் கீழ் முதல் விமானம் டெல்லியில் தரையிறங்கியது. இந்த விமானம் இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வந்தது. 211 பெரியவர்கள், ஒரு குழந்தை இருந்தது. டெல்லி விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொண்டு இந்தியர்களை வரவேற்றார்.



இரண்டாவது விமானம்

அக்டோபர் 14 2023 சனிக்கிழமை காலை இஸ்ரேலில் இருந்து 235 இந்தியக் குடிமக்களுடன் இரண்டாவது விமானம் டெல்லி வந்தது.  233 பேர் பெரியவர்கள், இரு கைக்குழந்தைகள் இருந்தனர். 

மூன்றாவது  விமானம்

அக்டோபர் 14 அன்றே ஆபரேஷன் அஜய்யின் மூன்றாவது விமானம் 197 இந்திய பயணிகளுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி நோக்கி வந்தது. 

நான்காவது விமானம்

இஸ்ரேலில் இருந்து  274 இந்திய மக்களை ஏற்றிக்கொண்டு நான்காவது விமானம் 15 அக்டோபர் ஞாயிற்றுக்கிழமை டெல்லி வந்தடைந்தது.

ஆபரேஷன் அஜய் இஸ்ரேல் ஏற்பாடுகள்

இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் தங்களிடம் பதிவு செய்துள்ள இந்திய குடிமக்களிடம் அரசு பேசி வருகிறது. இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம், சிறப்பு விமானத்தைப் பற்றித் தெரிவிக்க, முதல் குழுவில் தொடங்கி, பதிவு செய்யப்பட்ட இந்தியக் குடிமக்களை அணுகத் தொடங்கியது. ஆபத்தான பகுதியில் வசிக்கும் இந்திய குடிமக்கள் அமைதியாக இருக்கவும், விழிப்புடன் இருக்கவும், அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பு ஆலோசனைகளுக்கு கவனம் செலுத்தவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் 24/7 ஹெல்ப்லைனை 972-35226748 அல்லது 972-543278392 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது cons1.telaviv@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் அவசர காலங்களில் உதவியை வழங்க) அமைத்துள்ளது . இந்த ஹெல்ப்லைன் மூலம் இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு 24 மணி நேரமும் உதவுவதில் அவர்கள் அர்ப்பணிப்புடன் உள்ளனர்.

ஆபரேஷன் அஜய் vs ஆபரேஷன் கங்கா

ரஷ்யா-உக்ரைன் மோதலின் போது நடந்த ஆபரேஷன் கங்காவின் வெற்றியால் ஆபரேஷன் அஜய் மூலம் இஸ்ரேலில் சிக்கிய  இந்தியர்களை எளிதாக மீட்க முடிந்தது. அண்டை நாடுகளுக்கு இடையே எல்லையை கடக்க உதவுவதன் மூலம் இது சாத்தியமாகிறது. வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) விரைவான மற்றும் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் கடினமான நேரத்தில் இந்தியர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதி செய்தன. ஆபரேஷன் அஜய் 2023, கடினமான சூழ்நிலைகளை இந்தியா எவ்வாறு சமாளிக்கும் என்பதையும் காட்டுகிறது. அசம்பாவிதம் நடந்தால், இந்திய அரசு தனது குடிமக்களுக்கு உதவ விரைவாக நடவடிக்கை எடுக்கிறது.


Similar News