'மிஷன் 2024' - தமிழகத்தில் துவங்கும் பாஜக ஆட்டம்

Update: 2023-02-27 02:24 GMT

மிஷன் 2024 என புதிய திட்டத்துடன் தேர்தல் வியூகங்களுடன் தென்னிந்தியாவை கைப்பற்ற பாஜக அதிரடி திட்டத்துடன் களமிறங்கியுள்ளது.

இன்னும் சரியாக 12 மாதங்களில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தியாவை பிரதமர் மோடி ஆட்சி செய்ய ஆரமித்து 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என உலக நாடுகளே எதிர்பார்த்துவருகின்றன. குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகள் இன்று இந்தியாவை சார்ந்து இருக்கும் நிலையில் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றது.

பாஜகவை பொறுத்தவரை பிரதமர் மோடியை தவிர வேறு யாரையும் பிரதமர் வேட்பாளராக நிறுத்த இந்த நிமிடம் வரை யோசிக்கவில்லை, எதிர்தரப்பான காங்கிரஸ் கட்சியோ தங்கள் கட்சிக்கு தலைவர் தேர்நதெடுக்கவே மிகப்பெரிய போராட்டத்தை எதிர்கொண்டு மல்லிகார்ஜுன கார்கேவை இறுதியாக தலைவர் என அறிவித்துள்ளது. இந்த நிலையில் ராகுலின் இறுதி வாய்ப்பு என பார்க்கப்பட்ட பாரத் ஜோடோ யாத்திரையோ பலனிக்கவில்லை, மாறாக காங்கிரஸ் கட்சியின் மற்றொரு நாடகமாகவே பார்க்கின்றனர் மக்கள்.

இந்த சூழலில் பாஜக கடந்த முறை பெற்ற எம்.பி'க்கள் எண்ணிக்கையை விட அதிக அளவிலான எம்.பிக்களை நாடாளுமன்றத்திற்கு பாஜக சார்பில் அனுப்ப பல திட்டங்களை தீட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தென்னிந்தியாவில் அதிக அளவிலான எண்ணிக்கையில் எம்.பி'க்களை பெற்றால் மட்டுமே 400 என்ற அளவிலான எம்.பி'க்கள் என்ற எண்ணிக்கையை பாஜக 2024 தேர்தலில் எட்ட முடியும் என முடிவு செய்துவிட்டனர். இதற்க்கு திட்டமிடவும், அதற்கான வியூகங்களை வகுக்கவும் பா.ஜ.க தேசிய செயலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த 16ம் தேதி சட்டசபை தேர்தல் முடியாதுள்ளது, மேலும் இன்னும் 2 தினங்களில் மேகாலயா, நாகாலாந்தில் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இது மட்டுமில்லாமல் இந்த ஆண்டில் மேலும் ஆறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

இது மட்டுமில்லாமல் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம், இப்படி வரிசை கட்டி நிற்கும் இந்த சட்டசபை தேர்தல்களில் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க'வும் காங்கிரஸும் நேரடியாக மோதிக் கொள்ளவிருக்கின்றன. இப்படி நேரடியாக பாஜக,காங்கிரஸ் மோதும் மாநிலங்களில் ராஜஸ்தான், கர்நாடகா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்கள்.

இந்த நிலையில் தெந்தியாவில் எப்படியும் 150 எம்.பிக்களை பாஜக சார்பில் பெறவேண்டும் என்பதிலும் பாஜக மேலிடம் உறுதியாக இருக்கிறது. காரணம் இந்தியா முழுவதும் 400 எம்.பி'க்கள் என்ற எண்ணிக்கையில் பாஜக வெற்றிபெற வேண்டும் எனில் தெந்தியாவில் இருந்து 150 எம்.பிக்கள் கட்டாயம் வந்தாகவேண்டும் என அண்ணாமலை உட்பட தென்னிந்திய பாஜக மாநில தலைவர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தல் யுக்திகள், மேலிட பொறுப்பாளர்கள், தேர்தல் வேலைகள், மாநில அளவிலான கள நிலவரங்கள், கூட்டணி கட்சிகள் தற்போதைய நிலை, முதல்வர் வேட்பாளர், எம்.எல்.ஏ வேட்பாளர்கள், தேர்தல் வாக்குறுதிகள் என அனைத்தையும் விவாதிக்க பா.ஜ.க தலைமை முடிவு செய்துள்ளது.

இதற்காக புதுடில்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், பா.ஜ.க தேசிய பொதுச் செயலர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய தலைவர் நட்டா தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களைச் சேர்ந்த பொதுச்செயலர்கள் சார்பில் தனித்தனி அறிக்கைகளை தாக்கல் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் தென்னிந்தியா குறிப்பாக தமிகத்தில் பாஜக செய்யவேண்டிய அதிரடி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் கிடைத்து வருகின்றன.

Similar News