பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ2100 செலுத்தினால் 5 லட்சம் ரூபாய் கடனா?வலம்வரும் போலி கடிதம்! தெளிவுபடுத்திய மத்திய நிதியமைச்சகம்

சிறு வணிகங்களை நடத்தும் இந்த நாட்டின் கோடிக்கணக்கான சாமானிய ஆண்களும் பெண்களும், முறையான நிறுவனக் கடன் பெற முடியாமல் உள்ளனர். முத்ரா என்பது நிதியளிக்கப்படாதவர்களுக்கு நிதியளிக்கும் எங்கள் திட்டம் என பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஏப்ரல் எட்டாம் தேதி தொடங்கப்பட்டது
கார்ப்பரேட் அல்லாத,விவசாயம் அல்லாத சிறு,குறு நிறுவனங்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரை கடன் வழங்குவதன் மூலம் அதிகாரம் அளிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது 2024 ஜூலை 23 அன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2024-25-ல் முத்ரா கடன் வரம்பை ரூபாய் 20 லட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் அறிவித்தார் இந்த புதிய வரம்பு 2024 அக்டோபர் 24 முதல் நடைமுறைக்கு வந்தது
முத்ரா கடன் திட்டத்தின் பிரிவுகள்
சிஷு:ரூபாய் 50,000 வரையிலான கடன்களை உள்ளடக்கியது
கிஷோர்:ரூபாய். 50,000 க்கு மேல் மற்றும் ரூபாய் 5 லட்சம் வரை கடன்களை உள்ளடக்கியது
தருண்:ரூபாய் 5 லட்சம் முதல் ரூபாய் 10 லட்சம் வரையிலான கடன்களை உள்ளடக்கியது
தருண் பிளஸ்:ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 20 லட்சம் வரை கடன் உள்ளடக்கியது
முத்ரா திட்டத்தின் சாதனைகள்
கடந்த நிதியாண்டில் ஷிஷு பிரிவின் கீழ் மொத்தம் ரூபாய் 1,08,472.51 கோடி கிஷோர் பிரிவின் கீழ் ரூபாய் 1,00,370.49 கோடி தருண் பிரிவின் கீழ் ரூபாய் 13,454.27 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
உண்மை நிலவரம்
இந்த நிலையில் பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் ரூபாய் 2100 செலுத்தினால் ரூபாய் 5 லட்சம் கடன் வழங்கப்படுவதாக ஒரு போலி கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் போலியாக வலம் வருகிறது

இந்த கடிதத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிடவில்லை என மத்திய நிதி அமைச்சகமே தெரிவித்துள்ளது அதுமட்டுமின்றி முத்ரா நேரடியாக நுண் தொழில்முனைவோர் மற்றும் தனிநபர்களுக்கு கடன் வழங்குவதில்லை என்பதையும் மத்திய நிதி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது