மிகப்பெரிய திட்டத்துடன் தட்டித் தூக்க போகும் பா.ஜ.க... 3 வது முறையாக பிரதமராக போகும் மோடி..
2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 10 மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்காக பல்வேறு கட்சிகளும் தயாராகி வருகிறது. குறிப்பாக 2024 மக்களவை தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. பாஜக இப்படி ஒரு பக்கம் தயாராக கொண்டிருக்கும் பொழுது மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய திட்டத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்க்க வேண்டும் என்று நோக்கில் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த முறையாவது எப்படியாவது தங்கள் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று நோக்கில் பொதுக்குழு கூட்டங்களை ஆங்காங்கே நடத்துகிறார்கள்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் பாஜக கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் களம் இறங்கியுள்ளது. 2014 மற்றும் 2019ஆம் தேர்தல்களில் பயன்படுத்திய புதிய யுக்தி உடன் தற்போது 2024-ம் ஆண்டும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மீண்டும் பிரதமராக அரியணையில் மூன்றாவது முறையாக உட்கார வைக்க வேண்டும் என்ற ஒரு முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக தீவிர ஏற்பாடுகளை செய்தது. குறிப்பாக பிரதமர் தலைமையில் 38 கட்சியினர் நேற்று ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு இருந்தார்கள். மாலை 6 மணி அளவில் இந்த ஒரு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இந்த ஒரு நிகழ்ச்சிக்கு பிரதமர் தலைமை தாங்கி நடத்தி வைத்து இருக்கிறார். காங்கிரஸ் கட்சியினரும் பெங்களூருவில் எதிர்க்கட்சியினர் கூட்டத்தை நடத்தினார்கள் சுமார் இந்த ஒரு கூட்டத்தில் 26 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஆனால் பிரதமர் மோடி அவர்கள் தலைமையின் கீழ் 38 கட்சியினர் டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். என்பது குறிப்பிடத்தக்கது. என்ன தான் ஒரு பக்கம் காங்கிரஸ் வந்து, எதிர்க்கட்சியினர் ஒன்று கூடினால் பாஜகவை வீழ்த்த முடியும் என்று கற்பனைக்கோட்டை கட்டி இருந்தாலும், மறுபக்கம் அதற்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று முனைப்பில் பாஜக அவர்களை விட இரண்டு மடங்கு அதிகமாக உழைப்பை போட்டு தீவிரமாக நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்கள்.