'எதே புதுச்சேரில 300 ரூபா கொடுக்கிறாங்களா? அப்போ திமுக அரசு சொன்ன 100 ரூபாய் எங்கே?' - கோபத்தில் குடும்பத்தலைவிகள்!
'புதுச்சேரியில் இருக்குற பாஜக கூட்டணி அரசு சிலிண்டர்க்கு ரூ.300 மானியம் கொடுக்குறாங்களாம், இங்கேயும் தான் ஒரு அரசு இருக்கே' என குடும்பத்தலைவிகள் திமுக அரசை நோக்கி சாபத்தை விட துவங்கிவிட்டனர்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஜெயிக்க தனது வாக்குறுதிகளை பிரதானமாக வைத்தது, மேலும் விளம்பரங்கள் நிறைய, நிகழ்ச்சிகள், தேர்தல் யுக்திகள் சமூக வலைதள பிரச்சாரங்கள் என பல வியூகங்களை வந்தாலும் திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை மையமாக வைத்தே தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதனை செய்கிறோம், இதனை செய்கிறோம் எனவும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என கூறாத குறையாக திமுக தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியது.
505 தேர்தல் வாக்குறுதிகளை திமுக தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்டது. 505 தேர்தல் வாக்குறுதிகளில் பிரதான வாக்குறுதிகளாக குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய், பெட்ரோல், டீசல் விலையில் ஐந்து ரூபாய் மற்றும் மூன்று ரூபாய் விலை குறைப்பு, குடும்ப தலைவிகள் உபயோகப்படுத்தும் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறை என நம்ப முடியாத ஆனால் அதே நேரத்தில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளாக பிரதானமாக அளித்து வந்தது.
ஆனால் தேர்தல் முடிந்தவுடன் வழக்கம்போல் வாக்குறுதிகளை மறந்துவிட்டு மற்ற வேளைகளில் கவனம் செலுத்துதுவங்கியுள்ளது. திமுக எந்த வாக்குறுதிகளை பிரதான வாக்குறுதிகளாக வைத்து தேர்தலை சந்தித்ததோ அதே வாக்குறுதிகளை நிறைவேற்ற காலம் தாழ்த்தி வந்தது. இன்னும் சொல்லப்போனால் மக்கள் அந்த வாக்குறுதிகளை எங்கே வாக்குறுதிகள் என கேட்கும் அளவிற்கு திமுக அதனை பற்றி எதுவும் மூச்சு விடவே இல்லை. இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தல் காலத்தில் மீண்டும் வாக்குறுதிகளை எங்கே கேட்டுவிடப் போகிறார்களோ அந்த வாக்குறுதிகளை மனதில் வைத்து எங்கே வாக்குகள் விழாமல் செய்து விடப் போகிறார்களோ என பயந்த திமுக வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது.