சென்னைக்கு 4 நாட்கள், டெல்டாவிற்கு 1 நாள் மட்டும் பார்வையிடும் முதல்வர்!

Update: 2021-11-13 08:00 GMT

சென்னையில் சுற்றி 4 நாட்களாக நிவாரணப்பணிகள் என்ற பெயரில் புகைப்படம் எடுத்துவந்த ஸ்டாலின் 4 மாவட்டங்கள் கொண்ட காவிரி டெல்டா பகுதி மழை வெள்ள பாதிப்புகளை ஒரே நாளில் பார்வையிடுகின்றார்.


கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பருவ மழை கன மழையாக பெய்து கடலோர மாவட்டங்கள் உட்பட பல இடங்கள் மழை வெள்ளத்தில் தண்ணீரில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக குடியிருப்பு பகுதிகள், பாசன நிலங்கள் போன்றவை தண்ணீர் சூழ்ந்து மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த பேரிடர் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் கடந்த 4 நாட்களாக மழை வெள்ளத்தை பார்வையிடுகிறேன், அம்மா உணவகத்தில் சாப்பாடு ருசித்து பார்கிறேன், புதுமணத் தம்பதிகளை மழை வெள்ளத்தில் ஆசீர்வதிக்கிறேன், நிவாரண பொருள்கள் வழங்குகிறேன் என்ற பெயரில் வரிசையாக புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதளங்களிலும், தனியார் தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் குடுக்காத குறையாக செய்திகளை பரப்பினர். ஆனால் அதிகம் பாசன வயல்கள் பாதிப்புக்கு உள்ளான காவிரி நீர்ப்பாசன பகுதியான டெல்டாவில் காலையில் துவங்கி மாலையில் மழை வெள்ள சேதத்தை பார்வையிட்டு சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின் யாரை ஏமாற்ற?


சென்னையில் 4 நாட்களாக முதல்வர் பார்வையிடுகிறார் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துவிட்டு டெல்டா மாவட்டங்களில் காலை 9:30 மணிக்கு துவங்கி மயிலாடுதுறை வந்து தரங்கம்பாடி, இருக்கூர் பகுதிகள் பார்வையிட்டு பின்னர் 11:30 மணியளவில் நாகப்பட்டினம் செல்கிறார். அங்கு கருங்கனி, அருந்தவம்புலம் பகுதியில் பார்வையிட்டு 3 மணி நேரத்தில் இரண்டு மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பை கண்டறிகிறார்.


பின்னர் திருவாரூர் மாவட்டம் செல்லும் அவர் அங்கு புழுதிக்குடி, ராயநல்லூர் பகுதிகளையும் பார்வையிட்டு மதியம் மதிய உணவிற்கு மன்னார்குடி செல்கிறார். இப்படி மதிய உணவு நேரத்திற்குள் மூன்று மாவட்டங்களை பார்வையிடும் முதல்வர் மாலை 3:30 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பார்வையிட்டு பின்னர் சென்னை திரும்புகிறார்.


இப்படியாக முழு நாள் கூட இல்லாமல் நான்கு மாவட்டங்களில் மழைபாதிப்பை பார்வையிட்டு மக்களுக்கு நன்மை செய்யப்போகிறார் முதல்வர் ஸ்டாலின். இவர் வருவது பாதிப்புகளை பார்வையிடவா அல்லது பார்வையிட்டது போல் புகைப்படங்கள் எடுத்து விளம்பரப்படுத்தவா? 

- கதிர் சிறப்பு கட்டுரை

Tags:    

Similar News