பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளுக்கு கிலியை உண்டாக்கிய பிரதமரின் பேச்சு - விவசாயிகளுக்கு சென்ற 50 ஆயிரம் கோடி ரூபாய்!
பெட்ரோலில் எத்தனாலை கலப்பதன் காரணமாக கடந்த 7-8 ஆண்டுகளில், நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருந்த சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. எத்தனால் கலப்பு மூலம் இதே அளவு தொகை விவசாயிகளுக்கு சென்றுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்புவரை 40 கோடி லிட்டர் எத்தனால் ம
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 800 என்ற அளவில் மட்டுமே இருந்த சிஎன்ஜி நிலையங்களின் எண்ணிக்கை 4.5 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
2014 வரை சுமார் 14 கோடி சமையல் எரிவாயு(எல்.பி.ஜி) இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. உஜ்வாலா திட்டத்தின்கீழ் மட்டும் ஏழைப் பெண்களுக்கு சுமார் 9 கோடிக்கும் மேற்பட்ட எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். "தற்போது நாம் நாட்டில் ஏறத்தாழ 100% சமையல் எரிவாயு இணைப்பை வழங்கியுள்ளோம். 14 கோடி இணைப்புகளிலிருந்து நாட்டில் தற்போது சுமார் 31 கோடி இணைப்புகள் உள்ளன" என்றும் அவர் கூறினார்.
அரசியலில் சுயநலம் இருந்தால், இலவச பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதாக யார் வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்று பிரதமர் தெரிவித்தார். அதுபோன்ற நடவடிக்கைகள் நமது குழந்தைகளின் உரிமைகளைப் பறிப்பதோடு, நாடு தற்சார்பு அடைவதையும் தடுக்கும்.
இதுபோன்ற சுயநல கொள்கைகளால், நேர்மையாக வரி செலுத்துவோரின் சுமையும் அதிகரிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தெளிவான நோக்கம் மற்றும் உறுதிப்பாடு தேவை. இதற்கு கடின உழைப்புடன் சரியான கொள்கை மற்றும் பெருமளவிலான முதலீடுகளும் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.
Input From: The print