மோடி மெடிக்கல்: ரூ. 5,000 கோடி அளவிற்கு பொதுமக்கள் பணம் சேமிக்கப்பட்டது எப்படி?

Update: 2022-08-31 14:57 GMT

மத்திய மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் துறை தலைமை செயல் அதிகாரி ரவி தாதிச் சென்னையில் உள்ள பிரதமரின் மக்கள் மருந்தக உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, நாட்டில் உள்ள 8,700 பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் மூலம் 1,600 மருந்துகள் மற்றும் 250 அறுவை சிகிச்சை உபகரணங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், சென்னையில் மட்டும் 120 மக்கள் மருந்தகங்கள் மூலம் தரமான உயிர்காக்கும் மருந்துகளை மலிவான விலையில் பொதுமக்களுக்கு வழங்கி வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிக தேவையுள்ள மருந்துகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் மருந்தகங்கள் மூலம் பொதுமக்களுக்கு மலிவான விலையில் மருந்துகள் வழஙகப்பட்டு வருவதன் மூலமாக கடந்த நிதியாண்டில் ரூ. 5,000 கோடி அளவிற்கு பொதுமக்கள் பணம் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து மத்திய மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் துறையின் மண்டல கிடங்கினை ஆய்வு செய்த ரவி தாதிச், மாநிலம் முழுவதும் இயங்கும் மக்கள் மருந்தகங்களுக்கு சரியான நேரத்தில் மருந்துகளை விநியோகிக்க அறிவுறுத்தினார்.

Input From: Press release 

Similar News