கல்லக்குடியை வைத்து தி.மு.க கட்டிய கதை இதுதான்.. 60 வருட பர்னிச்சரை உடைத்து போட்ட அண்ணாமலை!

Update: 2023-11-19 02:54 GMT

கல்லக்குடி வைத்து திமுக கட்டி வரும் கதைகளை தற்பொழுது அண்ணாமலை அவர்கள் உடைத்து இருக்கிறார்கள். உண்மை எது? என மக்களுக்கு புரியும் விதமாக எடுத்து கூறி இருக்கிறார். உண்மையில் கல்லக்குடி கொண்டான் கவியரசு கண்ணதாசன் தான். கல்லக்குடி என்றால் கருணாநிதி என்ற பொய்யை திமுகவினர் வரலாற்றுகளில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை அவர்கள் தமிழக அரசியலில் புது மாற்றத்தை கொண்டு வர வேண்டும் மற்றும் மக்களுக்கு நல்ல ஒரு அரசியல் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் என் மண் என் மக்கள் என்ற ஒரு யாத்திரையை முன் நடத்தி மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறார்.


தமிழக அரசியலில் என் மண் என் மக்கள் என்ற யாத்திரை பயணம் மக்கள் மத்தியில் மிகவும் ஆழமான ஒரு கருத்தை பெற்று இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அண்ணாமலை தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். மக்களிடம் இதுவரை அதிக அளவில் இருந்து வரவேற்புகள் குவிந்து வருகிறது. அது மட்டும் கிடையாது மக்களிடம் எது பற்றிய குறைகள் இருக்கிறதோ?அதை மக்கள் புகார் பெட்டியில் தெரிவிப்பதற்கான ஒரு சூழ்நிலையும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக மூன்றாம் கட்ட நடை பயணம் வரை பல்வேறு மனுக்கள் அண்ணாமலை அவர்களிடம் மக்கள் சார்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றுக்கு உரிய நடவடிக்கை பாஜக தரப்பிலிருந்து எடுக்கப்படும் என்று வாக்குறுதியும் அளிக்கப் பட்டிருக்கிறது. அந்த வகையில் அண்ணாமலை அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லக்குடியில் தன்னுடைய நடைபயணத்தை தொடங்கி இருக்கிறார். நேற்று முன்தினம், இந்த ஒரு நடை பயண யாத்திரியின் போது அண்ணாமலை அவர்கள் திமுகவை பற்றி காரசாரமான உண்மை பதிவுகளையும், கல்லக்குடி மீது திமுக உருவாக்கி இருக்கும் பொய் பிம்பத்தையும் உடைத்து இருக்கிறார்.


உண்மையில் நடந்தது என்ன?என்பதை மக்களுக்கு வெளிக் கொண்டு வரும் விதமாக கள்ளக்குடி பற்றி திமுக தவறான செய்தியை பரப்பி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது, 1953 ஆம் ஆண்டு கல்லக்குடியை டால்மியாபுரம் ரயில் நிலையம் எனும் பெயர் மாற்றம் செய்த இதன் காரணமாக மூன்று குழுவினர் தமிழகத்தில் இருந்து பெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினார்கள். அதில் முதல் குழு கலைஞர் கருணாநிதி சார்பில் திமுக எடுத்த குழு, இரண்டாம் குழு காரைக்குடி ராம.சுப்பையா அவர்கள் சார்பில் முன்னெடுத்த போராட்டம், மூன்றாம் குழு கவிஞர் கண்ணதாசன் அவர்கள் முன்னெடுத்த குழு.



இந்தப் போராட்டத்தில் முதலில் கருணாநிதி அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து டால்மியாபுரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்த பலகையின் மேல் அன்று ஸ்டிக்கரை ஒட்டி அருகில் இருந்த ரயிலே வராத தண்டவாளத்தில் தலையை வைத்து போராட்டத்தை நடத்தினார். அவரை காவல்துறையினர் அழைக்காக தூக்கி சிறை வைத்தனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு வெளியில் வந்தார். ஆனால் உண்மையில் கல்லக்குடி போராட்டத்தில் நடந்த உண்மை வேறு. 1953 ஜூலை மாதத்தில் அதே போராட்டத்தில் கலந்துகொண்ட கண்ணதாசன் அவர்கள் தண்டவாளத்தில் போராட்டம் நடத்தினார். ஆனால் அவரை காவல்துறையினர் இரத்தம் சொட்ட சொட்ட அடித்து பிறகு அவரை சிறை வைத்தார்கள்.


பிறகு சிறை வைத்த கவிஞர் கண்ணதாசன் அவர்களை 18 மாதம் சிறை தண்டனைக்கு பிறகு தான் விடுவிக்கப் பட்டார். உண்மையில் கல்லக்குடி கொண்ட கருணாநிதி இல்லை, கல்லக்குடி கொண்ட கண்ணதாசன் என்பதே சரியானது. இது பற்றி கண்ணதாசன் அவர்கள் தன்னுடைய நூலான வனவாசம் என்பது தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி 70 ஆண்டுகளாக கல்லக்குடி மக்களை திமுகவினர் உண்மையை மறைத்து பொய்களை உண்மையாக சித்தரித்து ஏமாற்றி இருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பரபரப்பான தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News