யப்பா! 700 கோடி வரி ஏய்ப்பு... - 6 நாட்கள் ரெய்டில் வசமாக சிக்கிய ஜி ஸ்கொயர்!
700 கோடி ரூபாய் அளவுக்கு ஜி ஸ்கொயர் வருமானவரி ஏய்ப்பு செய்ததை கண்டுபிடித்த காரணத்தினால் தற்பொழுது ஜி ஸ்கொயர் மற்றும் அதனை சார்ந்தவர்களுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட 50 முதல் 60 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கினர். முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமான இடம், அமைச்சர் உதயநிதியின் நண்பர் வீடு, முதல் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கமான இடம் உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரி துறையினர் இறங்கி ஆறு நாட்களாக சோதனை செய்ததில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த முக்கிய ஆவணங்களில் அரசாங்க அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இடத்தை வளைத்து போட்டது, அதிகாரப் வலிமையை பயன்படுத்தி பல முறையற்ற அனுமதிகளை வாங்கி பணம் சேர்த்தது, முறையற்ற பண பரிவர்த்தனைகள், நிறைய போலி கம்பெனிகள், மேலும் பணம் பரிவர்த்தனை செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட கணக்குகள், சட்டவிரோத பண பரிமாற்றத்தை உருவாக்குவதற்காகவே ஏற்படுத்தப்பட்ட வங்கி கணக்குகள், மேலும் ஆளும் கட்சி யைச் சார்ந்த சில முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட சொத்து ஆவணங்கள், பண பரிமாற்றங்கள் போன்ற அனைத்தையும் வருமான வரித்துறையினர் கடந்த ஆறு நாட்களாக சோதனையிட்டு துருவி எடுத்துள்ளனர்.
இதன் பின்னணியில் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலும், நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ டேப் தான் காரணமாக இருக்கும் என சில தகவல்கள் கூறப்பட்டு வந்த நிலையில் இதன் பின்னணியில் ஆடியோ டேப் மட்டுமல்ல கடந்த நான்கு மாத காலமாகவே வருமானவரித்துறையினர் இதற்காக ஸ்கெட்ச் போட்டு உழைத்துள்ளனர் என்றும், கிட்டத்தட்ட 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடக்கும் பொழுது குறைந்தது ஒரு வருட காலமாவது இவர்களை கண்காணித்து இருப்பார்கள் என்றும், இவர்கள் எங்கு செல்கிறார்கள்? எங்கு பணம் வாங்குகிறார்கள்? எங்கிருந்து எங்கு பணம் கைமாறுகிறது? எங்கு புது கம்பெனிகள் பதிவு செய்கிறார்கள்? எங்கு புதுசாக தொழில்கள் துவங்கப்பட்டுள்ளன? தொழில்கள் துவங்கப்பட்டு அவை எங்கு குறுகிய காலத்தில் பல கோடி அளவில் பணப்பரிவர்த்தனைகள் நடக்கின்றது? எந்த கம்பெனி உண்மையானது? எந்த கம்பெனி போலியானது? என வருமான வரித்துறையில் இப்படி பல தகவல்களை ரொம்ப நாட்களாக ஸ்கெட்ச் போட்ட காரணத்தினால் தான் திடீர் ரெய்டு இறங்கி துவக்கியதாக தெரிகிறது.