தொடரும் கொலைகள்..! 8 வருடங்கள் காத்திருந்து திமுக ஆட்சியில் தொடர்ந்த பழிவாங்கும் படலம்!
ஆம்ஸ்ட்ராங் இறப்பு:
பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5 அன்று மாலை சென்னை பெரம்பூர் அருகே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது வீட்டிற்கு அருகில் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இருந்த போது ஆறு பேர் கொண்ட கும்பல் அரிவாள் உட்பட பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட, தாக்குதலை தடுக்க முயன்ற ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களையும் வெட்டியுள்ளது.இதனால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் பதில் தாக்குதல் செய்வதற்குள் தப்பிச் சென்றுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்த அவரது குடும்பத்தினர், அவர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டனர். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காவல்துறை வட்டாரங்களின்படி, மாலை 7 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல், தாக்குதலை நடத்தியதுடன், ஆதரவாளர்கள் பதிலளிப்பதற்குள் தப்பிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து துணை கமிஷனர் ஐ.ஈஸ்வரன், உதவி கமிஷனர் பிரவீன்குமார் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சந்தேக நபர்களைப் பிடிக்க செம்பியம் காவல் ஆய்வாளர் சிரஞ்சீவி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது, மேலும் வன்முறையைத் தடுக்க அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திமுகவை கண்டித்து வெடிக்கும் கோஷம்:
தொழிலில் ஒரு வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், முந்தைய கிரிமினல் வழக்குகளுடன் சிக்கலான கடந்த காலத்தைக் கொண்டிருந்தார், இருப்பினும் அவரது சட்ட சிக்கல்கள் ஒரு தசாப்தத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பி.எஸ்.பியின் செல்வாக்கு குறைவாக இருந்தபோதிலும் ஒரு முக்கிய தலித் தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டதன் மூலம் அவர் பிரபலமடைந்தார். தற்போது அவர் கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் தெருக்களில் திரண்டு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக திமுக அரசையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் கண்டித்து கோஷமிட்டு வருகின்றனர்.