பராமரிப்பின்றி கிடக்கும் 800 ஆண்டுகள் பழமையான கோவில்., நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை..!!
800 ஆண்டுகள் பழமையான கோவில் பராமரிப்பின்றி கிடப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமையான சிவன் மற்ரும் பெருமாள் கோவில்கள் உள்ளன. பல ஆண்டுகளாக அடிப்படை தேவைகள் எதுவும் நிறைவேற்றபடவில்லை என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கோவிலின் சுற்றுசுவர்கள் பராமறிப்பின்றி கிடக்கின்றன. அந்த பகுதியில் உள்ள மக்கள் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதற்கான சரியான நடவடிக்கைகள் எடுக்கபடவில்லை என கூறப்படுகிறது.
அந்த பகுதி மக்கள் இதுகுறித்து கூறுகையில், "கோவிலுக்கு சொந்தமாக உள்ள நிலங்களில் இருந்து வரும் வருவாயை கொண்டு கோவிலை சரியான முறையில் பராமரிக்கலாம் ஆனால் அதிகாரிகள் இதுகுறித்து கவனம் எடுத்து கொள்வதாக தெரியவில்லை. அதுமட்டுமின்றி, கோவிலின் வாயில்களில் கதவு இல்லாததால் அடிக்கடி திருட்டு சம்பவங்களும் நடைபெறுகினறன. இதனால் பழங்காலம் நகைகள் பொருட்கள் திருட்டு போகின்றன. அதனால் இந்த கோவில் வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்." என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து அறநிலையதுறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு அந்த கோவிலின் சுற்றுசுவர்கள் இல்லாததை நாங்கள் அறிவோம் முதலில் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும், பின்னர் கோவில் மற்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.