செந்தில் பாலாஜிக்கு இரக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கும் நேரத்தில் முதல்வர் ஸ்டாலினை குறிவைத்த CBI..

Update: 2023-06-17 04:40 GMT

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு செய்தியாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யும் நடவடிக்கை தான் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் 17 மணிநேர அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு அவர் இரவில் கைது செய்யப்படும் நிலையில் திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி வந்ததால் அவர் ஓமத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர் மனைவி கேட்டுக்கொண்டதால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.


அவருக்கு ஆஞ்சியோ கிராம் செய்ததில் செந்தில் பாலாஜி இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக அறிக்கை வந்துள்ளது. ஆனால் இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பது தற்போது வரை புலப்படாத ஒன்றாக தான் இருக்கிறது. ஏனென்றால் காலை அமலாக்கத்துறை விசாரணையின் போது வராத நெஞ்சு வலி எப்படி சரியாக கைது ஆகும் நிலையின் போது வந்தது? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஒரு பக்கம் திமுக தரப்பில் பாஜக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி வந்ததாகவும் பல்வேறு செய்திகளை கூறி அழுதாபங்களை சம்பாதித்து வருகிறார்கள். மறுபக்கம் அமைச்சர் சினிமா பாணியில் நடித்து வருகிறார் என்று பல்வேறு அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த ஒரு சர்ச்சை ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் திமுக பயந்து இனி அடுத்தடுத்து சிபிஐ விசாரணை நடைபெறும் என்று ஒரு அச்சத்தில் தமிழகத்தில் எந்த ஒரு வழக்கை விசாரிக்க வழங்கிய அனுமதியை தமிழக அரசு தற்பொழுது திரும்ப பெற்று இருக்கிறது. அதாவது சிபிஐ தற்பொழுது தமிழகத்தில் எந்த ஒரு வழக்கையும் விசாரிக்கலாம் என்ற அனுமதியை தமிழக அரசு முன்பு வழங்கி இருந்தது. ஆனால் தற்பொழுது அந்த அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற்று இருக்கிறது.


இதைப் பற்றி எந்த ஒரு மூச்சையும் வெளியில் விடாமல் கனகச்சிதமாக தங்களுக்கு ஏற்றால் போல் இவற்றை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு மாநில அரசின் முன் அனுமதியை பெறுவது அவசியம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இப்படி அனுமதி திரும்ப பெற்றதற்கு பின்னால் ஒரு பகிர் தகவல் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து இருக்கிறது. அவற்றை பற்றி தற்போது பார்க்கலாம். அடுத்ததாக முதல்வரை குறிவைத்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளி வந்து கொண்டு இருக்கிறது.


இதன் காரணமாகத்தான் தமிழக அரசு திடீரென்று வழங்கிய அனுமதியை தற்பொழுது திரும்ப பெற்றுக் கொண்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களும் இதுபற்றி தன்னுடைய ட்விட்டர் பதிவில் கூறும் பொழுது, "முந்தைய திமுக ஆட்சியின் போது மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்தத்திற்காக ரூ 200 கோடி பெற்றுக் கொண்டார் என்று தமிழக பாஜக கடந்த ஏப்ரல் மாதம் குற்றம்சாட்டியிருந்தது. இன்று தமிழக அரசின் அனுமதியில்லாமல் சிபிஐ விசாரணை நடத்த முடியாது என ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதை பார்க்கும் போது சிபிஐ விரைவில் தனது வீட்டிற்கு விசாரணைக்கு வரும் என அச்சத்தில் தமிழக முதல்வர் இருப்பதை போல் தெரிகிறது" என பதிவிட்டு இருக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து தற்போது அமலாக்கத்துறை கைது வரை நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் அடுத்தது முதல்வரை தான் குறி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவலை தொடர்ந்து அறிவாலயம் தற்பொழுது ஆட்டம் கண்டு இருக்கிறது. 

Tags:    

Similar News