அன்னை தெரசாவின் மிஷனரி அமைப்பின் FCRA உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு! மத்திய அரசு அதிரடி

Update: 2021-12-28 02:39 GMT

பல்வேறு முரண்பாடுகளால் மதர்தெரசாவால் நிறுவப்பட்ட மிஷனரிஸ் ஆப் சாரிட்டி(MoC) அமைப்பின் FCRA உரிமத்தை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்து உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மிஷனரிஸ் ஆப் சாரிட்டி அமைப்பின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாகக் கூறி கண்டனம் தெரிவித்த நிலையில் உள்துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் வதோதராவில் செயல்படும் மிஷனரிஸ் ஆப் சாரிட்டி அமைப்பின் இல்லத்தில் தங்கியுள்ள பெண்களும் சிறுமிகளும் மத மாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த அமைப்பின் மீது சமூகநலத்துறை மற்றும் குழந்தைகள் நலக் குழு அதிகாரிகள் அளித்த புகாரின் பெயரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

அந்த இல்லத்தில் தங்கியுள்ளவர்களை கிறிஸ்தவ மதத்தை தழுவ செய்யும் முயற்சியாக கிறிஸ்தவ மத நூல்களை வாசிக்க அழுத்தம் தரப்படுவதாகவும், கிறிஸ்தவ மத வழக்கப்படி பிரார்த்தனை செய்ய வற்புறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. சிறுமிகள் கழுத்தில் சிலுவை அணிய வைக்கப்படுவதாகவும் பைபிள் வாசிக்க வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. மேலும் அங்கு தங்கியிருந்த ஒரு பெண் கிறிஸ்தவ ஆண் ஒருவருக்கு வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இவை அனைத்தையும் மறுத்த மிஷனரீஸ் ஆஃப் சாரிடி அமைப்பு தாங்கள் பிரார்த்தனை செய்ததைப் பார்த்து குழந்தைகளும் அதை பின்பற்றியதாக விளக்கம் அளித்தது. எனினும் இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தும் விதமாக பல செயல்களில் ஈடுபட்டதாகவும் எழுந்தா குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு இந்த அமைப்பின் வங்கி கணக்குகளை முடக்கி விட்டதாகவும் இதனால் நாடு முழுவதும் உள்ள அவர்களது 22,000 பயனாளர்கள் பணியாளர்களும் உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி தவிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தாங்கள் வங்கி கணக்குகளை முடக்க வில்லை என்றும் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி அமைப்பு தாங்களாக முன்வந்து எஸ்பிஐ வங்கி இடம் தங்களது வங்கிக் கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. எனினும் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதற்கான FCRA உரிமத்தை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட மிஷினரீஸ் ஆப் சேரிட்டி அமைப்பும் தங்கள் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடியவில்லை என்றும் தங்களது உரிமத்தை புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக வங்கி கணக்குகளை முடக்குமாறு தாங்கள்தான் கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்துள்ளது. FCRA உரிமம் டிசம்பர் 31 வரை செயல்பாட்டில் உள்ள நிலையில் அதற்குப்பின் வெளிநாடுகளிலிருந்து நிதி பெற உரிமத்தை நீட்டிக்க தாக்கல் செய்த மனு தான் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து உள்துறை அமைச்சகத்திடம் மனு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி அமைப்பு தாக்கல் செய்த FCRA அறிக்கையில் முரண்பாடுகள் இருந்ததால்தான் உரிமத்தை புதுப்பிக்கக் கோரிய மனு நிராகரிக்கப்பட்டது என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. தற்போது இந்த அமைப்பு மீது வைக்கப்பட்டுள்ள புகார் நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரிமம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் உண்மை தெரியாமல் கிறிஸ்தவ திருச்சபைகளும் அரசியல்வாதிகளும் மத்திய அரசு சிறுபான்மையினரை ஓடுவதாகவும் அடங்குவதாகவும் உணர்ச்சிவசப்பட்டு கொந்தளித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : Times of India

Tags:    

Similar News